சென்னை மணலி புதுநகர் சிட்கோ வளாகத்தில் தீ விபத்து

SIDCO Industrial Complex fire in the plastic company

SIDCO Industrial Complex fire in the plastic company

சென்னை மணலி  புதுநகர்  விச்சூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில்  பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியின் உரிமையாளர் முரளி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை.

நேற்று இரவு வேலை முடிந்து கம்பெனியை பூட்டி சென்றனர். காவலாளி மட்டும் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென குடோனில் தீப்பற்றியது.இதை பார்த்த காவலாளி மணலி  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் உருகி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், புகை மூட்டமும் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் தீ பரவியது.

இதுதொடர்பாக மணலி, அம்பத்தூர் மற்றும் எண்ணூரில் ஆகிய இடங்களில் இருந்து 4 தீ யணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விலையுயர்ந்த  மோட்டார்கள்,  தளவாட பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து மணலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  தீ விபத்தில்  சேதம் மதிப்பு அதிகமாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

SIDCO Industrial Complex fire in the plastic company

Advertisement:

Industrial properties for sale in chennai: http://www.bestsquarefeet.com/

Related posts