தீபாவளி கொண்டாட்டத்தில் அடுத்தவர்கள் என்னென்ன பாதிபபுக்கு உள்ளாகிறார்கள் அடுத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது. எத்தனை பேரை தன் விடும் ராக்கெட் பாதிக்கும் என்று எண்ணாமல் கண்மூடித் தனமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தான் தீபாவளிப்பண்டிகை என்று ஆகி விட்டது.
இந்நிலையில் தீபாவளியன்று பெரிய உயிர்ச்சேதங்கள் இல்லையென்றாலும் வனத்தில் சென்று பறந்து வெடிக்கும் ராக்கெட் மத்தாப்பினால் சில இடங்களில் தீயணைப்பு வண்டிகளுடைய சேவை சென்னையில் தேவைப்பட்டது.
ராக்கெட் மத்தாப்பு மற்றும் வானவெடிகளால் குடிசை வீடுகள், பேப்பர் குடோன்கள் தீ பற்றி எரிந்துள்ளன. தீயணைப்பு துறைக்கு இந்த தீபாவளி தீவிபத்துக்கு மட்டும் மொத்தம் 76 அழைப்புகள் வந்துள்ளன. எல்லா அழைப்பிற்கும் தீயணைப்பு தண்ணீர் வண்டிகள் உடனே சென்று தீயை அணைத்தார்கள்.
பெரும்பான்மையாக மொட்டை மாடிகள் மேல் நிழலுக்கு போடப்பட்டிருந்த ஓலை கொட்டகைகள் தான் தீ விபத்துக்குள்ளானது. அயன்புரத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் இருக்கும் 2 குடிசைகள் மற்றும் ஓட்டேரியில் உள்ள காமராஜ் தெருவில் இருக்கும் 2 குடிசைகள் எரிந்தன.
மணலியில் உள்ள பாரதி நகர், வானகரத்தில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெரு, ஈக்காடுதாங்கலில் உள்ள காந்திநகர், நொளம்பூரில் உள்ள மாதா கோவில் தெரு, கோடம்பாக்கத்தில் உள்ள கோவிந்தராஜா தெரு, சுப்பராய தெரு, குரோம் பேட்டையில் உள்ள மும்மூர்த்திநகர், சேக்காட்டில் உள்ள பாலாஜி நகர் மற்றும் ஆவடியில் இருக்கும் காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மொட்டை மாடிமேல் மேயபட்டிருந்த கீற்று கொட்டகைள் தீ பற்றி எரிந்து சாம்பலானது.
மேலும் புளியந்தோப்பு, ஆழ்வார் திருநகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இராக்கெட் மத்தாப்பு வான்வெடிகள் விழுந்து தாக்கி 2 தென்ணை மரங்கள் எரிந்து சாம்பலானது.
தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.