சென்னையில் 'குடி'மகன் கார் பொதுமக்கள் மிது மோதியதில் 3 பேர் பலி

Drunken drive killed 3 people including a policeman by driving his car in Platform Near Marina Light house at chennai

சென்னையில் இருக்கும் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் குடித்து விட்டு தறிகெட்டு காரை ஓட்டி மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தீபாவளியன்று நடந்துள்ளது.

Drunken drive killed 3 people including a policeman by driving his car in Platform Near Marina Light house at chennai - மெரீனா காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகில் சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று தறிகெட்டு ஓடிய கலங்கரை விளக்கத்தை அடுத்து உள்ள பேருந்தி நிறுத்தத்தில் புகுந்தது அந்தக் கார். அடுதடுத்து நிறுத்தபட்டிருந்த கார்கள் மீதும் மோதி பின்னர் அங்கே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பயங்கரமாக மோதியது அந்தக் கார்.

மெரீனா காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகில் சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று தறிகெட்டு ஓடிய கலங்கரை விளக்கத்தை அடுத்து உள்ள பேருந்தி நிறுத்தத்தில் புகுந்தது அந்தக் கார். அடுதடுத்து நிறுத்தபட்டிருந்த கார்கள் மீதும் மோதி பின்னர் அங்கே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பயங்கரமாக மோதியது அந்தக் கார்.

இந்த விபத்தில் காமராஜர் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர் சேகர் (வயது 43), மைலாப்பூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த திலகவதி (வயது 33), திருவல்லிக்கேணி அயோத்திநகர் அர்ஜுனன் (வயது 19) ஆகியவர்கள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

மணிகண்டன் (வயது 20), துரை (வயது 60), பிரவீன்குமார் (வயது 23) ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள். மேலும் அந்த தறிகெட்ட காரில் வந்த அன்புசூரியன் (வயது 21), அவரது அக்கா லட்சுமி, கிருஷ் (வயது 22) ஆகியவர்களும் படுகாயம் அடைந்து கதறி கூச்சல் போட்டனர்.

காயம் அடைந்த 6 நபர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ளர்கள்.

சாலையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாறுமாறாக கார் ஓடி மோதியதால் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் காரை அடித்து நொறுக்கினார்கள்.

விபத்துக்கு உள்ளான காரை அன்பு சூரியன் ஓட்டி வந்தார். அவர் குடிபோதையில் வண்டி ஒட்டியதாக கூறப்படுகிறது. அதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒட்டி சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதி உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். காரில் வந்தவர்கள் எல்லோரும் அடையாறு காந்தி நகர் சுசிலா அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள்.

இந்த சம்பவம் பற்றி அண்ணாசதுக்கம் போக்கு வரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Drunken drive killed 3 people including a policeman by driving his car in Platform Near Marina Light house at chennai

Related posts