கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட்…
Read More சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. முதன்முதலாக தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடைசி நாளான சனிக்கிழமை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவிக்கும், தனக்கும் சேர்த்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், இதில் காஜியாபாத், இந்தர்புரியில் தனது பெயரில் ஒரு நிலமும், மனைவி பெயரில் குர்கானில் ஒரு குடியிருப்பும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஷீலா தீட்சித், பவன் கேரா ஆகியோர் மூலம் தன் மீது…
Read More டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டிகொல்கத்தா வந்த இங்கிலாந்து பிரதமர் தெரு ஓர கடையில் வடை வாங்கி சாப்பிட்டார்.
British PM’s sudden rendezvous, savours famous Kolkata street food! மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்த இங்கிலாந்து பிரதமர் ஓர் தெரு ஓரக்கடையில் வடையை வாங்கி சாப்பிட்டது அங்கே இருந்த பொதுமக்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து பிரதமர் திரு.டேவிட் கேமரூன் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு போனார். அவரது அந்த பயணத்தின் நடுவே ஜோகாவில் இருக்கும் ஓர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடினார். அதற்கு பின், தூதரக அதிகாரிகளுடன் மத்திய கொல்கத்தாவில் உள்ள தெருக்கடைக்கு சென்று வண்டியை விட்டு இறங்கி. ‘விக்டோரியா வடா ஷாப்’ என்னும் கடைக்கு சென்றார். கொல்கத்தாவின் தெருக்கடை உணவை சுவைக்க நினைத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவரே…
Read More கொல்கத்தா வந்த இங்கிலாந்து பிரதமர் தெரு ஓர கடையில் வடை வாங்கி சாப்பிட்டார்.சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.
Green organics chennai stores and Agro Food products exporters கிரீன் ஆர்கனிக்ஸ் – பசுமையகம் Green organics chennai stores and Agro Food products exporters சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு. ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??. வரும் 21ம் தேதி நவம்பர் மாதத்தில் காலை சுமார் 10.30 மணிக்கு இந்த இயற்கை அங்காடியை திறந்துவைக்க மக்கள் டிவி புகழ் ஹரிதாசன் அவர்கள் வருகிறார். இந்த அங்காடி, அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெண் சமூக சேவகர்கள் திருமதி.செல்வராணி மற்றும் திருமதி.தனலட்சுமி அவர்களால் துவங்கி நடத்தபடவுள்ளது. ரசாயன கலப்பில்லாத உணவு : ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களும், பாரம்பரிய சிறு தானியங்களும், பயிர் வகைகளும், அது சம்பந்த பட்ட உணவு பொருள் தயாரிப்புக்கள் ( ஜாம், ஜூஸ்,…
Read More சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பரவும் புதிய நோய்
தமிழக அரசின் இலவச திட்டத்துக்காக ஆந்திராவில் இருந்து வாங்கிய மாடுகளால்தான் கோமாரி நோய் பரவியதாக காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் பலியாகி உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்தால்தான் கோமாரி நோய் பரவியதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து நாகை மாவட்ட காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபி கணேசன் கூறுகையில், நாகை மாவட்டத்தில் கோமாரி நோயால் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 3 ஆயிரம் மாடுகள் இறந்துள்ளன. கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும், ஏழை, எளிய மக்களின் வருமானத்தை பெருக்கவும் அரசு விலையில்லா மாடுகளை வழங்கி உள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும்…
Read More ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பரவும் புதிய நோய்திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம். தீவிர சிகச்சை பிரிவில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. abdul kalam admitted in hospital
Read More திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம். தீவிர சிகச்சை பிரிவில் அனுமதிவெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.
கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் சச்சின் டென்டுல்கர் இன்று விடைபெற்றார் . இவரது 200வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கையை அசைத்தப்படி ரசிகர்களை பார்த்து கண்ணீர் மல்க நடந்து சென்றார். இவருடன் விராத் கோஹ்லியும் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் மகன் ஆகியோரும் கண்ணீர் விட்டபடி திகைத்து போய் நின்றனர். கிரிக்கெட் உலகில் சாதனை மன்னன் இன்றுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் இல்லாத எனது வாழ்வை நினைத்து பார்க்க முடியவில்லை என்று அவர் ஓய்வு குறித்து சச்சின் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய நன்றி கடிததத்தில் கூறியிருந்தார். சல்யூட் சச்சின், குட்பை., இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற. கோல்கட்டா டெஸ்டில்…
Read More வெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்
ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரி செய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது. இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்…
Read More நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு
human rights violations against the Tamils in Sri Lanka’s war against the LTTE கொழும்பு: மனித உரிமை மீறல்கள் குறித்த பலத்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள், கனடா, இந்தியா, மற்றும் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவி்ல்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தடபுடலாக ஏற்பாடோடு கொழும்பு சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பாக ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்களை கண்டித்து இந்த காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. அதே போல் மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து…
Read More இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்புசென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு : மறுபடியும் முதல்ல இருந்தா ???
Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai சென்னை: சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் மின்வெட்டை தமிழக மின்சார வாரியம் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாதகாலமாக இருந்து வந்த மின்வெட்டு பிரச்சினை, கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ காற்றின் பயனாக காற்றாலைகளில் தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக மின்வெட்டு பிரச்னை ஓய்ந்தது. எனினும் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் மின்வெட்டு பிரச்சினை ஆரம்பித்துள்ளது. Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai தினசரி ஒரு மணி நேரம் என துண்டிக்கபட்டிருந்த மின்சாரம் தற்சமயம் மென்மேலும் உயர்ந்து நகர்ப்புறங்களில் தினசரி 4 மணி நேரம்…
Read More சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு : மறுபடியும் முதல்ல இருந்தா ???

