மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்மநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் ஏடிஎம் திருடனை ஆந்திர காவல் துறையினர் வலை போட்டு தேடி வருகின்றனர்.
நடிகை ஸ்ருதிஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரை மர்மநபர் ஒருவர் தாக்க முயன்றபோது அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து தப்பியுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டான்.
மற்றொருபுறம் பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
இச்சம்பவமானது சிசிடிவி கமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிப்பதற்கு காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் நடிகையான ஸ்ருதிக்கு முன் உரிமை கொடுக்கப்பட்டு, குற்றவாளியை கண்டுபிடித்த காவல் துறையினர் சாதாரண பெண்ணான ஜோதியின் வழக்கில் தீவிரம் காட்டாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நாள் வரை ஏடிஎம் திருடனை நெருங்கிய வண்ணம் உள்ளோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.