பிரேத பரிசோதனையை காண சென்னை மருத்துவமனை புதிய கட்டிடம்

Mortuaries in government hospitals chennai: New Building for Mortuaries in government hospitals chennai for Medical Students to witness the autopsy. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்வதை மருத்துவ மாணவர்கள் நேரில் பார்க்க அரங்கம்  கட்டப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனை அந்தஸ்தை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பெற்று திகழ்கிறது. சென்னை மருத்துவக்கல்லூரிக்கு தனி சிறப்பும், பெருமையும் உள்ளன. தமிழகத்தின் கடைகோடி பகுதியில் இருந்தும் சிகிச்சை பெற சென்னை அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் இரவு-பகலாக இந்த மருத்துவமனை பரபரப்பாக இயங்குகிறது. நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள், விபத்து, கொலை, தற்கொலை, சந்தேக மரணம் போன்றவற்றால் உயிர் இழக்கின்றவர்களின் உடல்கள் மருத்துவக்கல்லூரி பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர அடையாளம் தெரியாத, உறவினர் அல்லாத யாரும் உடலை கேட்க வராத பிரேதங்களும் இங்கு பதப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் வரை பாதுகாக்கப்படுகின்றன.…

Read More

சேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதி

sethusamudram shipping canal project karunanidhi birthday மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன்  2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:-  திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.…

Read More

கைவிடப்பட்ட போரூர் மேம்பாலம்: முதல்வர் கண்படமக்கள் எதிர்ப்பார்ப்பு

porur junction bridge not yet Completed பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகள்: பலமுறை முதல்வர் இந்த சாலையை கடந்தும் விடிவுகாலம் வரவில்லை போரூர் மேம்பாலத்திற்கு பூந்தமல்லி செல்லும் வழியில் இரண்டு தூண்களோடு முடிந்து விட்டது போரூர் மேம்பால பணிகள். பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மக்களும் சாலையை கடக்க உயிரையும் பணயம் வைக்கும் நிலையும் அடிக்கடி நிகழ்கிறது. காவல் துறையும் தங்களின் பணிகளை முடிந்தவரை  சிறப்பாக செய்தாலும் நாளுக்குநாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. இன்னும் சில தினங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும் நிலையில் தண்ணீரும் தேங்கினால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் துயரத்துக்கு உள்ளாவோம் என அப்பகுதி மக்கள் வேதனைப் படுகின்றனர். போரூரில் 4 சாலைகள் சந்திக்கும் சிக்னலில் இருந்து மேற்கே போகும்…

Read More

தமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு

new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி,…

Read More

சென்னை மணலியில் பயங்கர தாக்குதல்: பெண் ரவுடி கை வருசை

Manali gang attack in chennai சென்னையை அடுத்த மணலியில் பெரியார் நகர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பே C-Tex நிரவனத்தில் கட்டிட பணி புரிந்த மற்றும் வீடு இல்லாதவர்களுக்காக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவர்களால் இலவசமாக கொடுக்கபட்டது. அந்த இடத்தில் தண்டயார் பேட்டையை சேர்ந்த கும்பல் ஒன்று அந்த இடத்தில் குடிசை வீடு ஒன்று கட்டிக்கொண்டு சில மாதங்களாக வசித்து வருகிறது. அந்த கும்பலுக்கு கோமளவல்லி என்ற பெண் ஒருவர் தலைவியாக செயல்படுகிறார் நேற்று இரவு இந்த கும்பலை சேர்த்த கோமளவல்லியின் சகோதரர் செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி, பழனிசாமி ஜானகி, மற்றும் கோமளவல்லியின் தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜா…

Read More

துப்பட்டா இல்லாததால் ஆதார் அட்டைக்கு டாட்டா

no Aadhar card photo with out dupatta சென்னையில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க துப்பட்டா போடாமல் வந்த பெண் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஆதார் அட்டைகள் வழங்கும் மையத்திற்கு லாவண்யா மோகன் என்ற பெண் நேற்று சென்றுள்ளார். அவர் துப்பட்டா போடாமல் சென்றதால் அதிகாரிகள் அவரை புகைப்படம் எடுக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து லாவண்யா மோகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க 1 மணிநேரம் காத்திருந்தேன். ஆனால் நான் துப்பட்டா போடவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். உள்ளூர் அதிகாரிகள் அவர்களாக சில விதிமுறைகளை வைத்துள்ளனர். இதில் கோபப்பட என்ன உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட்டிற்கு பிறகு துப்பட்டா, ஆதார் கார்டு ஆகியவை தான் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகள் ஆகும். இது குறித்து அதிகாரி எம்.ஆர்.வி.…

Read More

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : 9 மாணவிகள் முதலிடம்

sslc results exam 2013 தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள…

Read More

அழகிற்காக உடலை வருத்தி, அலட்சிய போக்கினால் உயிரை இழக்கும் பெண்கள் அதிர்ச்சி தகவல்

need awareness girls death poor nutrition இன்றைய இளைய தலைமுறை பெண்கள்  தங்களின் அழகிற்காகவும்  அலட்சிய போக்கினாலும் நாள் ஒன்றுக்கு 3ல் இருந்து 5பெண்கள் தமிழகத்தில் இறக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரியா வயது 27  சனி 18.05.13 அன்று போரூரை சேர்ந்த பிரபல மருத்துவமனையில்  வயிற்று கோளாறு காரணமாக அவசர மற்றும் தீவிர சிகிச்சிசை பிரிவில் சேர்க்கப்பட்டார் 24மணி நேரமும் மர்த்துவர் கண்காணிப்பில் இருந்த பிரியா 19.5.13 அன்று மதியம் சுமார் 4மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் கதறி அழுத அவள் அன்னை தந்தை மற்றும் உறவினர்களை சமாதானப் படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் சிறுது நேரம் திணறினர்.  செய்தி அறிய நேரடியாக நமது தமிழசிறகுகள்  செய்திதொடர்பாளர் மருத்துவமனையை  அணுகினர் ஆனால் அவர்கள் அதை பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டனர். தினம் பல நோயாளிகள்…

Read More

இலங்கை தமிழர் மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Srilankan origin Businessman murders family, commits suicide சென்னை பழவந்தாங்கலில் கடந்த பல ஆண்டுகளாக  குடியிருந்த சுந்தரேசன் (வயது 48) என்ற இலங்கை தமிழர், மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சினையே காரணம் என நம்பபடுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். Srilankan origin Businessman murders family, commits suicide

Read More

குடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்

tamilnadu government officers carelessness Tv anchor lingesh குடும்ப அட்டை பெற 4ஆண்டுகள் தவித்தேன் என தொலைகாட்சி தொகுப்பாளர் “லிங்கேஷ்”  அரசு அதிகாரிகளை கண்டு குமுறினார். ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகம் 4ஆண்டுகளாக  பலமுறை சென்று அலைந்த பிறகுதான் என்னால் குடும்ப அட்டை பெற முடிந்தது என அவர் கூறினார். மேலும் அவர்கூறுகையில், நான் பல்லாவரத்தில் இருந்து போரூருக்கு 5ஆண்டுகளுக்கு முன்  வீட்டினை மாற்றி குடிபுகுந்தேன், இதனால் என்   குடும்ப அட்டை மாற்றம் பெற தாம்பரம் தாலுக்கா  அலுவலகம் சென்று அலைந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து பல நாட்கள் அலைந்து பல அவமானங்களை சந்தித்த பிறகுதான் மாற்றி தரப்பட்டு ஸ்ரீபெரும்பத்தூர் சென்றேன். அங்கு மாற்றி கொடுத்த அட்டையை இணைக்க கொடுத்தேன் 7 நாட்களில் மாற்றி தரப்படும் என்றும் 21 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள்,  பின்னர் 21நாட்கள் கழித்து சென்று கேட்டால் என் அட்டை  தொலைந்து விட்டது ஆகையால் நான் பதிவே…

Read More