சென்னை மணலியில் பயங்கர தாக்குதல்: பெண் ரவுடி கை வருசை

Manali gang attack in chennai

சென்னையை அடுத்த மணலியில் பெரியார் நகர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பே C-Tex நிரவனத்தில் கட்டிட பணி புரிந்த மற்றும் வீடு இல்லாதவர்களுக்காக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவர்களால் இலவசமாக கொடுக்கபட்டது.

தாக்கப்பட்ட ராஜா தாக்கப்பட்ட ரஜினி

அந்த இடத்தில் தண்டயார் பேட்டையை சேர்ந்த கும்பல் ஒன்று அந்த இடத்தில் குடிசை வீடு ஒன்று கட்டிக்கொண்டு சில மாதங்களாக வசித்து வருகிறது. அந்த கும்பலுக்கு கோமளவல்லி என்ற பெண் ஒருவர் தலைவியாக செயல்படுகிறார் நேற்று இரவு இந்த கும்பலை சேர்த்த கோமளவல்லியின் சகோதரர் செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி, பழனிசாமி ஜானகி, மற்றும் கோமளவல்லியின் தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் ரஜினி என்ற இரு வாலிபர்களையும் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர் அவர்கள் இருவரும் மணலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கபட்டவர்களின் புகாரின் பேரில் மணலி M-6 காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் சதிஷ்குமார் செந்தில் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மற்ற குற்றவாளிகளை போலிசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.

Manali Gang attack in chennai. Chennai Manali Gang attack by lady rowdy after grabbing the land. Police arrested few accused.

Related posts