வழக்கறிஞர் மீது வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கொலைவெறி தாக்குதல்

வழக்கறிஞர் மீது வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கொலைவெறி தாக்குதல் File name: Saidapet-court.jpg

சென்னை: சென்னையில் வழக்கறிஞர் எழில் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் எழில் சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். ” சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் எழில் என்ற வழக்கறிஞரை வேளச்சேரியை சேர்ந்த ரவுடி மூர்த்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவரையும் அவருடன் வந்த அடியார்களையும் வேளச்சேரி காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read More

ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட டிவி நிருபர் வெட்டி கொலை

ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட டிவி நிருபர் வெட்டி கொலை File name: murder.jpg

சென்னை: ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இஸ்ரேல் மோசஸ் (25) என்ற தனியார் டிவி நிருபரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனது வீட்டில் இருந்த இஸ்ரேல் மோசஸ்சை வெளியே வர வைத்து வெட்டியதாக கூறப்படுகிறது. நல்லூர் புதுநகர் பகுதியில் இளைஞர்களுக்கு அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இஸ்ரேல் மோசஸ் தொடர்ந்து சோமங்கலம் காவல் துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வலியுறுத்தி வந்துள்ளார். கஞ்சா வியாபாரிகளுக்கு தெரியவந்ததால் இஸ்ரேல் மோசஸ்சை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Read More