தமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு

new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது.

பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சி பகுதிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து 9 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று மாலை 3.40மணிக்கு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் (200 வார்டுகள்) மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் முதல்கட்டமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மண்டலத்துக்கு ஒரு உணவகம் வீதம் 15 மலிவு விலை உணவகங்களை முதல்வர் பிப்ரவரி 19ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்த உணவகங்களில் இட்லி ரூ. 1-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயில் சாதம் ரூ. 3-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி 24 உணவகங்களும், மார்ச் 6ஆம் தேதி 34 உணவகங்களும் திறக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 73 வார்டுகளில் இந்த உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மீதமுள்ள 127 வார்டுகளில் உணவகங்கள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது . மலிவு விலை உணவகங்களுக்கு “அம்மா’ உணவகம் என்று பெயர் மாற்றம் செய்ய அரசிடம் அனுமதி கோரி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலிவு விலை உணவகங்களில் “அம்மா’ உணவகம் என்று பெயர் மாற்றப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன மேலும்  127 உணவகங்களை ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்ஃபரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.

பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சி பகுதிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து 9 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது. இன்று மாலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். கோவை மாநகராட்சியில் சிங்காநல்லூர் பஸ் நிலையம், பூ மார்க்கெட், மணியக்காரன் பாளையம் மாநகராட்சி பள்ளி அருகில், போத்தனூரில் பழைய குறிஞ்சி அலுவலகம், ராமநாதபுரம் 80 அடி ரோடு, மசக்காளிபாளையம் தொடக்கப்பள்ளி வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு புது பஸ் நிலையம், சரவணம்பட்டி சித்ரா நகர் சமுதாய கூடம், சுண்டக்காமுத்தூர் ரோடு குனியமுத்தூர் திருமால் வீதி திருமண மண்டபம், ஆகிய 10 இடங்களில் இன்று மாலை அம்மா உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.

கோவை பூ மார்க்கெட் வீதியில் உள்ள அம்மா உணவகத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார்.இதற்கான எற்பாடுகளை மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் செய்து வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் கருங்கல்பட்டி, மணியனூர் பழைய சூரமங்கலம், சந்தைப்பேட்டை, சூரமங்கலம் போலீஸ் நிலையம் பகுதி, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் அருகில், குமாரசாமிப்பட்டி முதல் அக்ரஹாரம் காய்கறி மார்க்கெட், மேற்குதெரு ஜோதி திரையரங்கம் பகுதி மேலும் வெங்கடப்பா ரோடு, சத்திரம் மேம்பாலம் அருகில் என மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட உள்ளது.

மதுரையில் அம்மா உணவகம் 10 இடங்களில் இன்று மாலை முதல் செயல்படத் தொடங்குகிறது. இடங்கள் விவரம் வருமாறு: ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி தேன்மொழி கல்யாண மண்டபம். ஆனையூர் (பழைய) நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ள வளாகம். புதூர் மாநகராட்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கட்டிடம். ஆத்திக்குளத்தை அடுத்த காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடம். ராமராயர் மண்டபம் அருகில். புதுராம்நாடு சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடம். சி.எம்.ஆர்.ரோட்டில் உள்ள மாநகராட்சி கட்டிடம். பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசல். திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகில். பழங்காநந்தம் பஸ் நிலையம் அருகில். ஈரோடு மாநகராட்சி பகுதியில் பஸ் நிலைய பகுதி, கருங்கல்பாளையம், கொல்லம்பாளையம், காந்திஜி ரோடு, சூரம்பட்டி, ஆர்.என்.புதூர், சூளை உள்பட 10 இடங்களில் இன்று மாலை 3 மணிக்கு அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது.

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை டவுன் வையாபுரி நகர், பேட்டை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், தச்சநல்லூர் பழைய பஞ்சாயத்து அலுவலகம், டவுன் பர்வதசிங்கராஜா தெரு, சந்திப்பு கணேசபுரம் பள்ளி வளாகம், பாளை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், திம்மராஜபுரம் அலகு அலுவலகம், அம்பேத்கார் நகர், மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகம், மேலப்பாளையம் அரசு மருத்துவமனை எதிரில் ஆகிய இடங்களில் இவை அமைந்துள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியில் ராஜாஜி பூங்கா, ஜார்ஜ் ரோடு, திரேஸ்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, லூர்தம்மாள்புரம், சந்தனமாரியம்மன் கோவில் தெரு, புது பஸ்டாண்டு, 2-ம் கேட், சத்திரம் தெரு, எம்.சவேரியார்புரம் ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சி பகுதியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தண்ணீர் தொட்டி, விறகு பேட்டை தண்ணீர் தொட்டி, ஜங்ஷன் ராக்கின்ஸ் சாலை, கோ அபிசேகபுரம் கோட்ட அலுவலகம், உழவர் சந்தை தண்ணீர் தொட்டி, குப்பாங்குளம் கல்யாணி கவரிங் எதிரே உள்ள ஜான் பஜார், உறையூர் சாலை ரோடு, சுகாதார ஆய்வாளர் அலுவலகம், அரியமங்கலம் காமராஜ் நகர், மேலகல்கண்டார் கோட்டை ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 உணவகம் இன்று திறக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலை தண்ணீர் தொட்டி அருகில் உள்ள அம்மா உணவகத்தை நாளை ஸ்ரீரங்கம் வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று திறந்து வைக்கிறார். வேலூர் மாநகராட்சியில் வேலூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலும், சொசப்பேட்டை மார்க்கெட் பள்ளி அருகிலும், கஸ்பா நெடுந்தெரு, விருபாட்சிபுரம் பழைய வணிக வளாகம் பின்புறம், பாகாயம் பள்ளி அருகிலும், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம் எதிரில், அலமேலு மங்காபுரம், காந்திநகர், பாரதிநகர் என 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 அம்மா உணவகங்களிலும் கூடுதலாக உணவு வகைகள் விற்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் வரவேற்பு மற்றும் கோரிக்கையை ஏற்று கூடுதலாக பொங்கல், லெமன் சாதம், கறிவேப்பிலை சாதம் வழங்கப்படும் என்று சட்ட சபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டத்தையும் இன்று மாலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

நாளை காலை முதல் சென்னையில் அனைத்து உணவகங்களிலும் பொங்கல், லெமன் சாதம், கறிவேப்பிலை சாதம் கிடைக்கும். காலையில் இட்லி மற்றும் பொங்கல் விற்கப்படும். இரண்டுக்கும் சாம்பார் வழங்கப்படும். மதியம் தினமும் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் கட்டாயம் இருக்கும். கூடுதலாக லெமன் சாதமும், கறிவேப்பிலை சாதமும் இடம்பெறும். ஒரு நாள் லெமன் சாதம், மறுநாள் கறிவேப்பிலை சாதம் என்று சுழற்சி முறையில் இடம்பெறும். எடை 350 கிராம் குறையாமல் வழங்கப்படும். உணவு வகைகள் அனைத்தும் நல்ல தரத்துடனும், ருசியுடனும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி கூடுதல் சுகாதார அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தினமும் அனைத்து உணவகங்களிலும் உணவு வகைகளின் தரம் மற்றும் ருசியை கண்காணிப்பார்கள். ஒவ்வொரு உணவகமும் அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படுகின்றன. சுய உதவிக்குழுவினருக்கு மாநகராட்சி சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

new amma restaurant

 Chennai Real estate company

Related posts