தமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு

new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி,…

Read More