no Aadhar card photo with out dupatta
சென்னையில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க துப்பட்டா போடாமல் வந்த பெண் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஆதார் அட்டைகள் வழங்கும் மையத்திற்கு லாவண்யா மோகன் என்ற பெண் நேற்று சென்றுள்ளார். அவர் துப்பட்டா போடாமல் சென்றதால் அதிகாரிகள் அவரை புகைப்படம் எடுக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து லாவண்யா மோகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க 1 மணிநேரம் காத்திருந்தேன். ஆனால் நான் துப்பட்டா போடவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். உள்ளூர் அதிகாரிகள் அவர்களாக சில விதிமுறைகளை வைத்துள்ளனர். இதில் கோபப்பட என்ன உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த ட்வீட்டிற்கு பிறகு துப்பட்டா, ஆதார் கார்டு ஆகியவை தான் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகள் ஆகும். இது குறித்து அதிகாரி எம்.ஆர்.வி. கிருஷ்ணா ராவ் கூறுகையில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இந்த உடை தான் அணிய வேண்டும் என்றில்லை. முன்பு தான் சட்டையில்லாதவர்களும், காலர் இல்லாமல் சட்டை போட்டு வருபவர்களும் புகைப்படம் எடுக்கப்பட மாட்டார்கள் என்ற விதி இருந்தது.
ஆனால் தற்போது ஆடை குறித்த எந்த விதிமுறையும் இல்லை. சில இடங்களில் புகார்கள் வருகின்றது. காஞ்சீபுரத்தில் உள்ள சில பிராமணர்கள் எங்களை தொடர்பு கொண்டு சட்டை இல்லாமல் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டனர். அதன்படி அனுமதியும் வழங்கப்பட்டது என்றார்.