பிரேத பரிசோதனையை காண சென்னை மருத்துவமனை புதிய கட்டிடம்

Mortuaries in government hospitals chennai: New Building for Mortuaries in government hospitals chennai for Medical Students to witness the autopsy. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்வதை மருத்துவ மாணவர்கள் நேரில் பார்க்க அரங்கம்  கட்டப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனை அந்தஸ்தை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பெற்று திகழ்கிறது. சென்னை மருத்துவக்கல்லூரிக்கு தனி சிறப்பும், பெருமையும் உள்ளன. தமிழகத்தின் கடைகோடி பகுதியில் இருந்தும் சிகிச்சை பெற சென்னை அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் இரவு-பகலாக இந்த மருத்துவமனை பரபரப்பாக இயங்குகிறது. நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள், விபத்து, கொலை, தற்கொலை, சந்தேக மரணம் போன்றவற்றால் உயிர் இழக்கின்றவர்களின் உடல்கள் மருத்துவக்கல்லூரி பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர அடையாளம் தெரியாத, உறவினர் அல்லாத யாரும் உடலை கேட்க வராத பிரேதங்களும் இங்கு பதப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் வரை பாதுகாக்கப்படுகின்றன.…

Read More