tamilnadu government officers carelessness Tv anchor lingesh
குடும்ப அட்டை பெற 4ஆண்டுகள் தவித்தேன் என தொலைகாட்சி தொகுப்பாளர் “லிங்கேஷ்” அரசு அதிகாரிகளை கண்டு குமுறினார்.
ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகம் 4ஆண்டுகளாக பலமுறை சென்று அலைந்த பிறகுதான் என்னால் குடும்ப அட்டை பெற முடிந்தது என அவர் கூறினார். மேலும் அவர்கூறுகையில், நான் பல்லாவரத்தில் இருந்து போரூருக்கு 5ஆண்டுகளுக்கு முன் வீட்டினை மாற்றி குடிபுகுந்தேன், இதனால் என் குடும்ப அட்டை மாற்றம் பெற தாம்பரம் தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து பல நாட்கள் அலைந்து பல அவமானங்களை சந்தித்த பிறகுதான் மாற்றி தரப்பட்டு ஸ்ரீபெரும்பத்தூர் சென்றேன். அங்கு மாற்றி கொடுத்த அட்டையை இணைக்க கொடுத்தேன் 7 நாட்களில் மாற்றி தரப்படும் என்றும் 21 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள், பின்னர் 21நாட்கள் கழித்து சென்று கேட்டால் என் அட்டை தொலைந்து விட்டது ஆகையால் நான் பதிவே செய்யவில்லை எனறனர். பிறகு அவர்கள் தந்த சீட்டை கொடுத்து கேட்ட பின்பு அடுத்த மாதம் வாருங்கள் என்றார்கள். இது போல் 4வருடம் அலைந்த பிறகு குடும்ப அட்டை மாற்றம் பெற்றேன் அது பல பிரச்சனைகளை சந்தித்த பிறகும் பலரிடம் சண்டை போட்ட பின்புதான் கிடைத்தது.
அரசு அலுவலகத்தில் எதை எப்படி செய்யவேண்டும் என்று அவர்களுக்கே தெரியவில்லை அதை சரியாய் சொல்வதற்கும் ஆளில்லை, குடிக்க தண்ணீர் இல்லை, அமர எந்த ஒரு இடமும் இல்லை, பேச சாந்தமான அதிகாரியும் இல்லை, அங்கு வருபவர்களில் அதிகமானோர் வயதானவர்கள் தான் அவர்கள் படும் கொடுமைக்கு அங்கு அளவே இல்லை கதை பேசவும் சாப்பிடவும் நேரம் இருக்கும் அதிகாரிகளுக்கு மக்கள் பிரச்சனையை கேட்க மட்டும் நேரமே இல்லை, இது எனக்கு மட்டும் இல்லை என்னை போல் பலரும் அந்த வரிசையில் இன்று வரை நின்று கொண்டு இருக்கின்றனர்.
அரசு அதிகாரிகளுக்கும், சிபாரிசு, அரசியல் வாதிகள் மற்றும் லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்கின்ற வேலைக்கே நேரம் போதவில்லை அவர்களுக்கு. எதற்கு எடுத்தாலும் லஞ்சம் 20ருபாய் முதல் 2000 வரை கொடுக்க வேண்டும், என் நாட்டில் எனது உரிமையை பெற நான் பணம் கொடுக்க வேண்டும்.
இதனால்தான் பல இளைஞர்கல் வெளிநாடு சென்று விடுகின்றனர் என நினைக்கின்றேன். படித்த எனக்கே இவ்வளவோ பிரச்சனை என்றால் படிக்காத பாமர மக்கள் பணம் இல்லாமல் எந்த ஒருவேலையையும் அரசு அலுவலகத்தில் முடிக்க முடியாது எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும் எத்தனை மாற்றங்கள் அரசியலில் நடந்தாலும் எத்தனை முதலமைச்சர்கள் மாறினாலும் லஞ்சம் ஒழிந்த பாடில்லை, அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வேலை செய்தால் பாமர மக்களின் கதி என்ன என அவர் குமுறினார்.
இந்த குடுப்ப அட்டையை நானும் சிபாரிசு வைத்து ஒரு வாரத்தில் பெற்று இருக்க முடியும் அனால் அதை செய்ய வில்லை நானே பெற வேண்டும் என்று நினைத்ததால் 4ஆண்டுகள் ஆனது, சிபாரிசில் சென்றால் 4நாட்களில் முடிகின்ற வேலை தனி மனிதனுக்கு நடப்பதற்கு 4ஆண்டுகள் ஆகின்றது ஏன் இந்த அவலம், மேலும் இந்த நிலை இங்கு மட்டும் கிடையாது பத்திரபதிவு அலுவலகம், தாசில்தார் அலுவலகம்,கிராம நிர்வாக அதிகரி அலுவலகம் மற்றும் எல்லா அரசு அலுவலகங்களும் அடங்கும்.
இங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டும் அரசின் எல்லா இலவசம் மற்றும் அறிவிப்புகள் சரியாகசென்றுவிடுகின்றன,ஆனால் மக்களுக்கு சென்று அடைவது இல்லை, அப்படியானால் எல்லா பொது மக்களும் என்னுடன் சேர்த்து(லிங்கேஷ்)அரசியல்வாதிகளாகவும் பணக்காரர்களாகவும் மாறினால் இந்த லஞ்சம் என்ற ஒட்டுண்ணியை ஓரளவு ஒடுக்கமுடியும் என் நினைக்கின்றேன் என மன வேதனை படுகின்றார் மேலும் எல்லா இளைஞர்களும் இனி அரசு அலுவலகம் ரேஷன் கடைகள் சென்று வரிசையில் நின்று நாமே அனைத்து அதிகாரிகளையும் பார்த்து கேள்வி கேட்டு நம் உரிமையை பெறவேண்டும் நம் தாய் தந்தையை இனி அந்த காத்திருப்பு வரிசையில் விடாமல் நாம் நிற்க வேண்டும் இளையசமுதாயம் நினைத்தால் இதை மாற்ற முடியும்.
இதில் என்ன கொடுமை என்றால் அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் பாதிக்கு மேல் இருப்பவர்கள் இளைஞர்கள், “நானும் சிபாரிசு மற்றும் லஞ்சம் கொடுத்த பிறகுதான் எனக்கு அட்டை கிடைத்தது” என்று அரசு அலுவலம் மற்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டு வேதனை படுகின்றார்.