Dr Niranjan Mardi IAS
சென்னை 22 மே 2013: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய துறையான உள்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறையின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய முக்கிய நியமனங்கள்:
ராஜீவ் ரஞ்சன் – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் ( முன்பு வகித்த பதவி: வருவாய்த் துறை செயலாளர்)
ககன்தீப் சிங் பேடி – வருவாய்த் துறை செயலாளர் ( முன்பு வகித்த பதவி: கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர்)
எஸ். விஜயகுமார் – கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் (முன்பு வகித்த பதவி: ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர்)
கிரிஜா வைத்தியநாதன் – நில நிர்வாக ஆணையாளர் (முன்பு வகித்த பதவி: தமிழ்நாடு மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்).
Dr Niranjan Mardi IAS
இதையும் படியுங்கள்
- பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார்.
- நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கம்: நில மோசடி வழக்கு
- ஜெ.பேரவை மாநில செயலாளர் கார் பறிமுதல்
- ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெங்காய விற்பனைக்குக் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை: கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு முடிவு என தகவல்
- சென்னையில் கனமழை: அமைச்சர்களை உடனே சென்னை திரும்ப முதல்வர் விஜய் உத்தரவு – சிவப்பு எச்சரிக்கை, 3 என்டிஆர்எஃப் குழுக்கள், 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- விஜய் தேர்தல் வழக்கு: குழந்தைகளிடம் கேட்டது ஊழல் நடைமுறை ஆகாது; சேலம் வடக்கு தேர்தல் மனுவை நிராகரிக்கும் நிலையில் உயர் நீதிமன்றம்
← முந்தைய செய்தி: குற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
அடுத்த செய்தி →: குடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்
