கைவிடப்பட்ட போரூர் மேம்பாலம்: முதல்வர் கண்படமக்கள் எதிர்ப்பார்ப்பு

porur junction bridge not yet Completed பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகள்: பலமுறை முதல்வர் இந்த சாலையை கடந்தும் விடிவுகாலம் வரவில்லை போரூர் மேம்பாலத்திற்கு பூந்தமல்லி செல்லும் வழியில் இரண்டு தூண்களோடு முடிந்து விட்டது போரூர் மேம்பால பணிகள். பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மக்களும் சாலையை கடக்க உயிரையும் பணயம் வைக்கும் நிலையும் அடிக்கடி நிகழ்கிறது. காவல் துறையும் தங்களின் பணிகளை முடிந்தவரை  சிறப்பாக செய்தாலும் நாளுக்குநாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. இன்னும் சில தினங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும் நிலையில் தண்ணீரும் தேங்கினால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் துயரத்துக்கு உள்ளாவோம் என அப்பகுதி மக்கள் வேதனைப் படுகின்றனர். போரூரில் 4 சாலைகள் சந்திக்கும் சிக்னலில் இருந்து மேற்கே போகும்…

Read More