Dr Niranjan Mardi IAS சென்னை 22 மே 2013: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய துறையான உள்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறையின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய முக்கிய நியமனங்கள்: ராஜீவ் ரஞ்சன் – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் ( முன்பு வகித்த பதவி: வருவாய்த் துறை செயலாளர்) ககன்தீப் சிங் பேடி – வருவாய்த் துறை செயலாளர் ( முன்பு வகித்த பதவி: கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர்) எஸ். விஜயகுமார் – கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் (முன்பு வகித்த பதவி: ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர்) கிரிஜா வைத்தியநாதன் –…
Read MoreCategory: சென்னை சிறகுகள்
விஸ்வரூபம் திரைப்படம் : நீதிமன்றம் அவசர உத்தரவு
actor kamal hassan vishvaroopam high court order நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியப் போட்டி (வர்த்தகம்) கமிஷனில் ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் புகார் ஒன்றை அளித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் காரணமாக படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போய்விட்டது என்றும் அந்தப் புகாரில் கமல்ஹாசன் கூறியுள்ளார். தீர்மானம் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள…
Read Moreநடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு
Tamilnadu police power star Dr.srinivasan again arrested “கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்தின் மூலம் பிரபலமான “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மேலும் ஒரு வழக்கு காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது இவருக்கு 11வது வழக்கு. ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 2.5 கோடி பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மலேசியாவைச் சேர்ந்த மணீஷ் என்பவரின் புகாரின் பேரில் சிறையில் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் சீனிவாசனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உள்ளனர். நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு Land for sale in chennai by www.bestsquarefeet.com Tamilnadu police power star Dr.srinivasan again arrested
Read Moreவன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கை
Jayalalithaa cautions ban PMK for violence வன்முறையில் இடுபாடும் கட்சியினரை கட்டுபடுத்தாவிட்டால் அந்த கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய அரசு தயங்காது என பா.ம.க வினருக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு – வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருவது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு: மரக்காணம் சம்பவம் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பா.ம.க அறிவித்த தொடர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து போலீசார் ெரிவித்திருந்தும் சட்ட விரோதமாக கடந்த 30&ம் தேதி தடையை மீறி போராட்டத்தை நடத்த தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கூடியதால், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க வினர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன தொழிலாளர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும்…
Read Moreரு.443 கோடி மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு.
tamil nadu housing board land encroached தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வருடாந்தர தணிக்கை அறிக்கையின் படி மொத்தமாக ரூ.442.99 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாகவும் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கையகபடுத்த நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு சென்னையில் அதிகபடியாக அண்ணாநகர், பெசன்ட் நகர், முகப்பேர், கே கே நகரில் நடந்திருப்பதாகவும் இதுபோல் கோவையுலும் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பு விவரம்: அண்ணாநகர் – ரூ.178.கோடி பெசன்ட் நகர் – ரூ.177.28கோடி முகப்பேர் – ரூ.47.63கோடி கோவை – ரூ.17.6கோடி இதில் கே.கே நகர் பகுதியில் 229.6 ஏக்கர் நிலமும், கோவையில் 82.64 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கையகபடுத்தபட்ட சுமார் 3,353 ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் அண்ணாநகர், பெசன்ட் நகர், கே கே நகர், முகப்பேர் பகுதியில் பெரும்பாலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. tamil nadu…
Read Moreபிரபல நடிகர் "பவர் ஸ்டார்" ஸ்ரீனிவாசன் கைது.
Tamil actor Powerstar Srinivasan arrested சென்னை 26 ஏப்ரல் 2013: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது. ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சார்ந்த P.S.ரங்கநாதன் என்பவர் பண மோசடி சம்பந்தமாக அளித்த புகாரின் பேரில்.வெள்ளி மலை ஸ்ரீனிவாசனை (50) கைது செய்ததாக சென்னை போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. பிரபல நடிகர் “பவர் ஸ்டார்” ஸ்ரீனிவாசன் கைது. மேலும் சுமார் 20 கோடி ருபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக ருபாய் 50 லட்சம் பெற்று வங்கி கடனும் வாங்கித்தராமல் பெற்ற கமிஷனையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் செய்யபட்டுள்ளது. திரு.மணிகண்டனின் இயக்கத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்ற தமிழ் படத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. Tamil actor Powerstar Srinivasan arrested Well…
Read Moreஇந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.
Indian mathematician shakuntala devi no more 22 April 2013: பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80. கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார். சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சகுந்தலா…
Read More