வன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கை

Jayalalithaa cautions ban PMK for violence

வன்முறையில் இடுபாடும் கட்சியினரை கட்டுபடுத்தாவிட்டால் அந்த கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய அரசு தயங்காது  என பா.ம.க வினருக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க வினருக்கு ஜெயலலிதா கடும் எச்சரிக்கை

தமிழ்நாடு – வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருவது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு: மரக்காணம் சம்பவம் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பா.ம.க அறிவித்த தொடர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து போலீசார்  ெரிவித்திருந்தும் சட்ட விரோதமாக  கடந்த 30&ம் தேதி தடையை மீறி போராட்டத்தை நடத்த  தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கூடியதால், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க வினர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன தொழிலாளர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில், பா.ம.கவினர் கற்களை வீசி வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அக்கட்சியினர் கும்பலாக சேர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை வழிமறித்து அப்பாவி பயணிகள் கண் எதிரிலேயே பீதியை ஏற்படுத்தும் வகையில் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் செய்து சட்டம் ஒழுங்கை சீரழித்து எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அக் கட்சியை தடை செய்ய அரசு தயங்காது.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Jayalalithaa cautions ban PMK for violence

Property buying and selling in Chennai : www.bestsquarefeet.com

Related posts