டெல்லியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து 4பேர் உயிரிழப்பு

Building collapses in North Delhi

Building collapses in North Delhi
Building collapses in North Delhi

டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆனது. இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர். மேலும், இதில் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், 12 பேர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு டெல்லியில் உள்ள இன்டர்லோக் பகுதியில் இன்று காலை 9 மணியளவில், மூன்று அடுக்குக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சபடுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்க தீ அணைப்பு வீரர்களும் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். தவிர 4 ஜே.சி.பி.க்கள் இடுபாடுகளை மீட்கும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்ற நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடிந்து விழுந்த கட்டிடம் 50 ஆண்டு காலம் பழமைவாய்ந்ததாகவும், நெருக்கடியான பகுதியில் கட்டிடத்தின் அருகாமையில் மற்றொரு கட்டுமான பணி நடைபெற்று வருவதால் ஏற்பட்ட அதிர்வே இந்த விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

Building collapses in North Delhi

Building collapses in North Delhi
Building collapses in North Delhi

Twelve persons were rescued from under the debris and rushed to hospitals, police said. Four persons were killed when a four-storey building collapsed in Inderlok area in North Delhi on Saturday. Twelve persons were rescued from under the debris and rushed to hospitals, police said. While three persons were brought dead at Bara Hindu Rao Hospital, one person was brought dead at Acharya Bhikshu Hospital. “Five persons were brought to our hospital out of which three were brought dead. Two others were injured and they are being treated,” said Dr. R.B. Mittal, Medical Superintendent, Bara Hindu Rao Hospital. According to fire officials, they got a call around 9 a.m. about a building collapsing at Tulsi Nagar in Inderlok following which four fire tenders were rushed to the spot for the rescue operations. The incident took place in a congested locality and seems to have been caused by construction work on an adjacent plot, a fire official said. “The building was around 50 year old and a number of families lived there,” said Deputy Commissioner of Police (North) Madhur Verma.

Related posts