Star runner, 8 months pregnant, competes in 800 meters at U.S. championships
கர்ப்பமாக இருந்த போதிலும் தளராமல் களத்தில் ஓடி 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்சாதனை புரிந்துள்ளார் அமெரிக்க வீராங்கனை அல்சியா மோன்டானோ. பின்னாளில் தன்னுடைய குழந்தைக்கு சொல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை பாடத்தை இதன் மூலம் நடத்திக் காட்டியுள்ளார் அவர். இந்த அற்புதமான தருணத்தின் மூலம் தன்னுடைய குழந்தைக்கு தன்னம்பிக்கையின் அற்புதத்தையும் காட்டியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 34 வார கர்ப்ப வயிற்றுடன் கலந்து கொண்டார் அல்சியா. 5 முறை உலக சாம்பியனான இவர் தன்னுடைய ஓட்டத்தை 2 நிமிடங்கள் 32.13நொடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார். ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டில் மொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 1:57:34மணிக்கூறுகளில் கடந்த இவர், இந்தமுறை தன்னுடைய முந்தைய சாதனையில் 35 நிமிடங்கள் தாமதமாக கடந்துள்ளார். “கர்ப்பமான வயிற்றுடன் ஓடினாலும் நான் மிகவும் தன்னம்பிக்கையாகவே உணர்ந்தேன்” பந்தயத்தில்வென்ற பின்பு அல்சியா கூறிய வாசகங்கள் இவை. 28 வயதான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான இவர் ஹார்னட்ஸ்டேடியத்தில் குவிந்திருந்த ரசிகர் கூட்டத்தினரின் ஆரவாரத்திற்கு இடையில் இந்த சாதனையை புரிந்துள்ளார். தன்னுடைய முதல் சுற்றை அல்சியா முடித்த போது அனைத்து ரசிகர்களும் தங்களுடைய அமர்க்களமான மகிழ்ச்சியை அளித்தனர். வெற்றிக் கோட்டை அவர் தொட்டபோது மகிழ்ச்சி சப்தம்விண்ணையே பிளந்தது. “நான் சாதாரணமாக சுற்றுப்பாதையைக் கடக்க விரும்பவில்லை. 800 மீட்டர் சுற்றுப்பாதையயும் கடந்து வெற்றிக்கோட்டை அடையவே விரும்பினேன்” என்று கூறியுள்ளார் அவர். அல்சியாவின்மருத்துவர்களும் வெறும் சரியுடன் நிறுத்தி விடாமல் அல்சியாவிற்கு சிறந்த ஊக்கத்தை அளித்துள்ளனர். “ஒரு பெண் கர்ப்ப வயிற்றுடன் ஓடினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் போன்ற பயத்தை எல்லாம் நான் தூக்கி எறிந்துவிட்டுதான் ஓடினேன். நான் கர்ப்பமாக இருக்கின்றேன் அவ்வளவேதான். இதற்காக என்னுடைய தினசரி செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை” என்றுகூறியுள்ளார் அல்சியா. கர்ப்பமான நேரத்தில் நடக்கவே பயப்படும் பெண்களுக்கு மத்தியில், குழந்தையை சுமந்து கொண்டு ஓடி சாதனை படைத்துள்ள அல்சியா பெண்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது மிகையில்லை.
Star runner, 8 months pregnant, competes in 800 meters at U.S. championships
SACRAMENTO, Calif. — Alysia Montano will have a heck of a story to tell her first child. Thirty-four weeks pregnant, or nearly eight months, Montano ran the 800 meters Thursday in the U.S. track and field championships. The five-time national champion finished in 2 minutes, 32.13 seconds — nearly 35 seconds slower than her personal best of 1:57.34 in 2010 in Monaco.”I’ve been running throughout my pregnancy and I felt really, really good during the whole process,” Montano said after the qualifying heat. That the 28-year-old former University of California star finished last in her heat didn’t matter one bit to the crowd gathered at Hornet Stadium. Trailing the lead pack by more than 120 meters for most of the race, Montano received a rousing ovation as she finished her first lap, and the cheering grew louder when she finally crossed the finish line. “I just didn’t want to get lapped and be the first person to get lapped in the 800,” said Montano, the 800 national champion the past four years. She was never close to being lapped, taking a nice, relaxed pace from the start and maintaining it throughout. That was according to the plan Montano laid out after consulting with her physician. Not only did doctors give Montano the OK to run, they encouraged her. “That took away any fear of what the outside world might think about a woman running during her pregnancy,” Montano said. “What I found out mostly was that exercising during pregnancy is actually much better for the mom and the baby. … I did all the things I normally do … I just happened to be pregnant. This is my normal this year.”