தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிஇட மாற்றம்

6 IAS officers transferred in Tamilnadu

6 IAS officers transferred in Tamilnadu

 தமிழ்நாட்டில் 6 ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை பணி இடம்  மாற்றப்பெற்றனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்ட உத்தரவுவில்:

திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர்
இதற்கு முன்பு வகித்த பதவி: மக்கள் தொகை ஆணைய கணக்கெடுப்பு இயக்குநர்

திரு.ஸ்வரண் சிங்: தொழில் துறை ஆணையர் – தொழிற்சாலைகள் மற்றும் வணிகம்
இதற்கு முன்பு வகித்த பதவி: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர்

திரு.என்.எஸ்.பழனியப்பன்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர்(பஞ்சாயத்துராஜ்).
இதற்கு முன்பு வகித்த பதவி: தொழில் துறை முதன்மைச் செயலர்

திரு.சி.வி.சங்கர்: தொழில் துறை முதன்மைச் செயலாளர்.
இதற்கு முன்பு வகித்த பதவி:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர்.

திரு.கே.பாலச்சந்திரன்-தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர்.
இதற்கு முன்பு வகித்த பதவி:தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

திரு.டி.என்.வெங்கடேஷ்-தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.
இதற்கு முன்பு வகித்த பதவி:சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர்-கல்வி

தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளரான திரு.எஸ்.கிருஷ்ணனுக்கு, 14-வது நிதி ஆணையத்தின் சிறப்புப் பணி அலுவலர் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

6 IAS officers transferred in Tamilnadu

AIADMK Government announced a reshuffling of IAS officers, serving in various important departments.

Related posts