Religious gang Removed Hindu dalit dead Body From the Grave yard in Pakistan
பாகிஸ்தான்: இஸ்லாமியருக்கு ஒதுக்கிய சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த தலித் வாலிபரின் சடலம் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது.
பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியில், இந்து தலித் இனத்தை சேர்ந்த புரோ பீல் எனும் நபர் சாலை விபத்து ஒன்றில் இறந்தார். இறுதி சடங்கு செய்து அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் எனும் சுடுகாட்டில் அடக்கம் செய்தார்கள்.
பின்னர், அடக்கம் செய்த சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கும்பல் ஒன்று அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வீசினார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினர் சுடுகாட்டில் ஒரு இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என அந்த மதவாத கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது.
சுமார் 8 மணி நேரம் பொட்டல் காட்டில் கிடந்த பீலின் உடலை அடக்கம் செய்ய இடம் இன்றி அவரது குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாயினர்.
பின்னர் உள்ளூர் நில உரிமையாளர் ஒருவர் தமது நிலத்தில் அந்த உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய பின்னர் அங்கே நிலைமை சீரானது.
Religious gang Removed Hindu dalit dead Body From the Grave yard in Pakistan
Muslim gang dug up a Hindu dalit body in southern Pakistan in a dispute over burial land, police said Tuesday, in a flare up of tensions between the two religious groups.