Indian Petroleum minister Veerappa Moily travled in Metro rail to his office
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய விலை உயர்வை கட்டுபடுத்த ‘எரிபொருள் சிக்கனம்’ மிக அவசியம் எனும் கருத்தை பல சமயங்களில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார் அமைச்சர் வீரப்ப மொய்லி.
கடந்த மாதம் ‘எரி பொருள் சிக்கனம்’ சம்பந்தமாக உரையாற்றும் போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மெட்ரோ இரயில் மற்றும் இதர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பின் படி இன்று காலை அவர் அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டிற்கு அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று அங்கே இருந்து இரயிலில் ஏறி, அவரது அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் சென்ட்ரல் செக்ரட்ரியட் நிலையத்தில் இறங்கி அலுவலகத்திற்கும் நடந்து சென்றார்.