ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்

27-border23-600

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் பீம்பெர்-காலி- காம்பீர் முன்னரங்க நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்திய படைகளும் பதில் தாக்குதலை நடத்தின. இருதரப்பினரிடையேயான துப்பாக்கிச் சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் வீரர்களுக்கு படுகாயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. முன்னதாக கடந்த 17,18-ந் தேதிகளிலும் சம்பா பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related posts