Sonia gandhi cannot be accepted as Indian prime minister : Sushma swaraj
புதுடில்லி : இத்தாலி நாட்டில் பிறந்து வளர்த்தவர் சோனியா. அவரை பிரதமராக எப்போதும் ஏற்ற்று கொள்ளவே முடியாது என பா.ஜ., லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்த கொண்ட அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், சோனியா காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கட்டும், ஆனால் அதற்காக அவரை பிரதமராக கண்டிப்பாக ஏற்க முடியாது; இப்படி ஒரு வெளிநாட்டுகாரர் இந்திய பிரதமராக தேர்வு செய்தால் அது பாரம்பரியம் மிக்க இந்தியாவையும், இந்தியர்களை அவமான படுத்தும் செயலாகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நமது முன்னோர்கள் பலர் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். இப்படி, உயிர் தியாகம் செய்து வெள்ளையரிடம் இருந்து பெற்ற சுதந்திரம் 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் நாட்டின் உயரிய பதவிக்கு ஒரு வெளி நாட்டு காரரை அமர்த்துவது, இந்தியாவில் உள்ள 100 கோடி இந்தியர்களும் திறனற்றவர்கள் என்று ஆகும். இது இந்திய மக்களின் உணர்வுகளை பெரிதாக பாதிக்கும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary:
Sonia gandhi cannot be accepted as Indian prime minister : Sushma swaraj
As Sonia Gandhi belong to foreign origin. It was cropped up again today by Bharatiya Janata Party leader Sushma Swaraj. She said that she still opposes the idea of proposing her for the candidature of the Prime Minister.