தெருவில் சுற்றி வரும் திருடர்கள் பிடிக்க காவல் துறையினர் அதிரடி

Police searching for Chain snatching thieves in chennai suburb

சென்னை சுற்றி உள்ள புறநகர் நகரங்களை சுற்றி வரும் சில்லறை திருடர்களை பிடிக்க காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையின் புறநகர் பகுதியான போரூர் மாங்காடு பூந்தமல்லி தாம்பரம் கூடுவன்சேரி மற்றும் வட சென்னை எண்ணூர் மணலி மாதாவரம் கொரட்டூர் செங்குன்றம் போன்ற பகுதிகளில் சில்லறை திருடர்கள் அதிகரித்து வருகின்றனர் பைக் கில் சுற்றிவரும் இந்த திருடர்கள் சாலையின் ஓரமாய் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருக்கும் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு வேகமாய் பறந்து விடுகின்றனர். இதுமட்டும் இல்லாமல் சாலையின் ஓரமாய் நடந்து செல்லும்  பலரின் பைகளை பறிப்பது மொபைல் போனை அடித்து பிடுங்குவது வட மாநிலத்தவர்களை அடித்து பணம் பிடுங்குவது என பல குற்றங்களை இவர்கள் செய்கின்றனர்

இவர்களை பிடிக்க சென்னை காவல் துறையினர் பல வியுகங்கள் வகுத்தாலும் அவர்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர், இதனால் காவல் துறையினர் அவர்கள் அதிவேக இஞ்சின் வண்டிகளை வைத்து தான் இந்த தொழிலை செய்வதினால் பல இடங்களில் கேமரா வைத்து கண்காணிப்பது என முடிவு செய்து உள்ளனர் மற்றும் இந்தபகுதியில் வரும் அதிவேக இஞ்சின் பல்சர் யமஹா அபசி கரிஷ்மா போன்ற பைக்குகலை கண்காணிக்க சோதனை சாவடி அமைக்க உள்ளனர். இந்த சோதனைகளுக்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பகுதியை சார்ந்த காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

இப்படி நடத்தப்பட்ட சில சோதனைகளில் சிக்கிய திருடர்களை சோதனை இட்டதில் அவர்கள் கல்லுரி மாணவர்களாகவும் சிறய வேலை செய்யும் இளைஞ்சர்கலாகவும் மைதானத்தில் விளையாடிவிட்டு செல்லும் பொழுது கை செலவிற்காகவும் இதனை செய்ததாகவும் கூறுவதாக காவல் துறையினர் தெருவிக்கின்றனர்.

Police searching for Chain snatching thieves in chennai suburb

Police searching for Chain snatching thieves in chennai suburb

Related posts