Chennai Building Collapse: One Dead, 50 Feared Trapped
சென்னையில் பெய்த திடீர் மழையில், போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். சென்னையில் இன்று மதியம் , திடீர் மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு என சில மணி நேரத்தில் சென்னை அல்லோகலப்பட்டது. இடிந்த விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை, மீட்க கட்டட இடிபாடுகளில் உள்ள கம்பிகள் இடையூறாக கூறப்படுகிறது. இதனால் கம்பிகளை அகற்ற மீட்பு படையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கட்டட இடிபாடுகளுக்குள் 4 பெண்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க, சம்பவ இடத்திற்கு அரக்கோணத்திலிருந்து 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். அப்பகுதியில் மக்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிகிறது. இவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புபணி கூடுதல் இயக்குநர் எஸ் விஜயகுமார் கூறியுள்ளார். மேலும்அவர், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.எவ்வளவு பேர்கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என தெரியவில்லை. 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர் னெ கூறினார். இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டடம் ஏரி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகதெரிகிறது. கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்குமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மேலும் அவர், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ள மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Chennai Building Collapse: One Dead, 50 Feared Trapped
One person died after one of the two towers of a 11-storey under-construction building collapsed near Chennai on Saturday. 11 people have been rescued so far and the injured are being admitted to the Ramachandra Medical College and Hospital for treatment. Around 50 people are still feared trapped under the debris of the residential building. 12 fire tenders and the National Disaster Management team have reached the collapse site. Expressing grief over the incident, Tamil Nadu Chief Minister J Jayalalithaa issued a statement saying that the Chennai Police Commissioner and other senior officials are on the spot and tough action would be taken against those responsible. The incident occurred at Moulivakkam near Porur in the western suburb, about 20 km from Chennai, as rains lashed the area and several other parts of the city today.