அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கு அலகாபாத் உயநீதிமன்றத்தில் நடைபெற்றது.அந்த வழக்கில் சர்ச்சைக்குறிய நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ளும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்காக 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.

வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு பற்றி கேட்டனர்.மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு தொடர்பாக தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.

Related posts