கருணாநிதியின் தத்துப்பிள்ளை, மு.க.மணியை கண்டுபிடிக்க நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., அரசின், இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், அமைச்சர் வளர்மதி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பரிதி இளம்வழுதி கருத்து வெளியிடுகையில், தி.மு.க.,வில் இருப்பது கும்பல், அ.தி.மு.க.,வில் இருப்பது கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும்; கூட்டம் நிலையாக நிற்கும். நானும் நிலையாக உங்களுடன் நிற்பேன். தமிழக அரசியலில், குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் தி.மு.க., வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக தி.மு.க.,விற்கு உழைத்தேன், நான் என்ன தவறு செய்தேன். 1991 – 1996ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.,வாக சட்டசபையில் செயல்பட்டேன். நான் அப்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்து இருந்தால், உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும்,…
Read MoreCategory: சென்னை சிறகுகள்
விஜயகாந்துக்கு அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்
arrest warrant for Vijayakanth திங்கள், 1 ஜூலை 2013: சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அரசு அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று விஜயகாந்த் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இதனால், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் இன்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட்…
Read Moreஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு விமான நிலையம்:பிரதமர் முடிவு!
Green Field airport Sriperumbudur புதுடில்லி: ஸ்ரீபெரும்புதூர் உட்பட, எட்டு இடங்களில், இந்தாண்டுக்குள் விமான நிலைய பணிகளை துவங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பிரதமர் அலுவலக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர், பெல்லாரி உட்பட, எட்டு இடங்களில், கிரீன்பீல்டு விமான நிலைய பணிகளுக்கான ஏற்பாடுகளை, இந்தாண்டுக்குள் துவங்கி, முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனியார் – அரசுத் துறை பங்களிப்புடன், சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆறு மாதங்களில், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், அரசு – தனியார் பங்களிப்புடன், 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.…
Read Moreபள்ளி வேன் கவிழ்ந்து ஒரு மாணவர் பலி, 7 மாணவர்கள் படுகாயம்
அதிகாலை இன்று (26.6.13) பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவர்கள் படுகாயம் ஒரு மாணவர் பலியானார் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்லாவரம் அருகே தனியார் பள்ளி வேல்ஸ் வித்யாஷ்ரம் வேன் கவிழ்து 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் ஆனால் 9ம் வகுப்பு மாணவரான தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். pallavarm school bus accident. student deth
Read Moreதமிழக அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக பாடசாலை கல்வி துறை வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. இந்த நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பாடசாலைக்கு செல்ல முடிவதில்லை. இதையடுத்து நாளைமுதல் (திங்கட்கிழமை) முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பாடசாலை துவங்கும், மாலை, 4:15க்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Government school timing changed. Tamilnadu government
Read Moreவருகிறது மலிவு விலை அம்மா மினரல் வாட்டர் கேன்
low cost mineral water bottle tamilnadu குறைந்த விலையில் சுகாதாரமான குடிநீரை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு அம்மா மினரல் வாட்டர் என்று உற்பத்தி நிலையம் அமைக்க படும் என்று முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிக்கையில் அறிவித்துள்ளார். இங்கு உற்பத்தியாகும் குடிநீர் ஒரு லிட்டர் அளவுக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டீல்களில் நிரப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.…
Read Moreதமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் முதல்வர் நடவடிக்கை
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார். இன்று முதல்வர் ஜெயலலிதா தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி(சேமிப்பு கிடங்கு கழகம்), வி.என்.ரவி(ஜவுளி கழகம்), பிரபாகர்(சிறுதொழில் மேம்பாடு), அருண்மொழித்தேவன்(சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன்(பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு) , ரவிச்சந்திரன்(வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன்(தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8…
Read Moreமொளச்சூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலி
திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர் கிராமப் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது கொடிக்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதால் திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளை யொட்டி கொடிக்கம்பம், கல்வெட்டு இன்று திறக்கப்படுவதாக இருந்தது. அதற்கான ஆயத்த பணிகள் நேற்று இரவு நடந்தது. கட்சியின் தோரணங்கள், அலங்கார பணிகளும் செய்யப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு மொளச்சூர் பகுதி 45வது வார்டு திமுக கிளைச் செயலாளரும், அரசு பேருந்து ஓட்டுநரும் ஏ.பாஸ்கர் (வயது 45), 12வது வார்டு கிளைச் செயலாளர் சி. முருகன் (வயது 45), 6வது வார்டு கிளைச்செயலாளர் டி.பாஸ்கர் (வயது 43) ஆகிய மூவரும் இரும்பினால் ஆன கொடிக்கம்பத்திற்கு கருப்பு-சிவப்பு வர்ணம் பூசி அந்த கொடிக்கம்பத்தை கல்வெட்டின் மீது பதிப்பதற்காக…
Read Moreஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம்
ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வசதி துறை சார்ந்தோர், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எஃப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கூட்டம் நேற்று தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்த வேண்டும் என்றும் கிலோ மீட்டர்களுக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவை அமல்படுத்துவது குறித்து இதில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மேலும் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணமும் கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு தலா ரூ.10 கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதிக்குள் கட்டாயமாக அனைத்து…
Read Moreகவிஞர் வாலி உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி வியாழன் அன்று உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர். கவிஞர் வாலி அவர்கள் வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டும்மல்லாமல், இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர். 50ஆண்டுகள் கடந்து இன்றும் திரையுலகில் பாடல் எழுதுபவர் என்பதினால் வாலிப கவிஞர் வாலி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர். எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். திரையுலகில் அனைவருக்கும் இனியவராக திகழ்பவர் வாலி. காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று…
Read More