ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு விமான நிலையம்:பிரதமர் முடிவு!

Green Field airport Sriperumbudur

புதுடில்லி: ஸ்ரீபெரும்புதூர் உட்பட, எட்டு இடங்களில், இந்தாண்டுக்குள் விமான நிலைய பணிகளை துவங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பிரதமர் அலுவலக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர், பெல்லாரி உட்பட, எட்டு இடங்களில், கிரீன்பீல்டு விமான நிலைய பணிகளுக்கான ஏற்பாடுகளை, இந்தாண்டுக்குள் துவங்கி, முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனியார் – அரசுத் துறை பங்களிப்புடன், சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆறு மாதங்களில், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், அரசு – தனியார் பங்களிப்புடன், 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரயில் கட்டண ஆணையம் அமைக்கவும், முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: தொலை தொடர்பு, மின்சாரம், நிதி ஆகிய துறைகளில் உள்ளதை போல், நிலக்கரி துறையின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில், தனி அதிகாரத்துடன் செயல்படக் கூடிய, ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க, மத்திய அமைச்சரவை, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றுவதற்கு முன், நிர்வாக ரீதியான உத்தரவு மூலம், ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. செபி உள்ளிட்ட அமைப்புகள், நிர்வாக உத்தரவின் மூலம், உருவாக்கப்பட்ட முன் உதாரணம் உள்ளது. நிலக்கரி துறைக்காக அமைக்கப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, நிலக்கரிக்கான விலை நிர்ணயம் பற்றிய கொள்கை அணுகுமுறைகளை விளக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்.

Green Field airport Sriperumbudur

English Summary:

With the proposed greenfield airport at Sriperumbudur finding a place in the PM’s list of  infra targets for 2013-14, Airports Authority of India (AAI) Chairman V P Agrawal said that if the State obliges, this airport “could be completed even before the one in Navi Mumbai”. Agrawal explained that the ground was flat and ideal for constructing an airport, unlike in Navi Mumbai which will require more levelling work. The PM’s report also outlined the fact that just like the existing Chennai airport in Meenambakkam, even this one will be modelled along the Public-Private-Participation (PPP) model. “This is ideal for us, but we are also constrained by the fact that there will be opposition,” he said. On the the ongoing privatisation of the existing airport, he said, “we have had a lot of concerns after we privatised Delhi and the CAG has pointed out a whole list of problems that we have to fix. So we are going slow and steady with this airport.”

He confirmed that the tender process for taking charge of the existing terminal was far from starting. The proposal for the greenfield airport, proposed to be spread across 5,000 acres with a budget of Rs 20,000 crore has been pending with the state government for the greater part of a year now. “From our side we can only look at the modality and facilitate the tender process, but unless the state decided to act nothing can happen with the project,” he told Express over phone. Agrawal, along with the Civil Aviation Secretary had met the Chief Secretary twice in the last six months. “I have been told that Madam (Jayalalithaa) is considering the proposal, so we are hopeful that there will be some movement with the project soon,” added Agrawal. The need for a second airport in Chennai was because the growth in passenger and cargo traffic was expected to boom over the next decade. “I am certain that the current terminals will not be able to handle the growing traffic for more than 6-7 years. If we don’t start the second airport building process now, it will become very difficult,” he pointed out. The good news is that even though the new airport will become a reality soon, the existing Kamaraj Domestic Terminal will not be put to waste. As AAI was planning to turn it into warehousing space, Air Asia plugged for space to build a regional office inside the terminal and have been allotted one-fourth of the terminal to work with.

English News Courtesy-New Indian Express

Related posts