ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு விமான நிலையம்:பிரதமர் முடிவு!

Green Field airport Sriperumbudur புதுடில்லி: ஸ்ரீபெரும்புதூர் உட்பட, எட்டு இடங்களில், இந்தாண்டுக்குள் விமான நிலைய பணிகளை துவங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பிரதமர் அலுவலக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர், பெல்லாரி உட்பட, எட்டு இடங்களில், கிரீன்பீல்டு விமான நிலைய பணிகளுக்கான ஏற்பாடுகளை, இந்தாண்டுக்குள் துவங்கி, முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனியார் – அரசுத் துறை பங்களிப்புடன், சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆறு மாதங்களில், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், அரசு – தனியார் பங்களிப்புடன், 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.…

Read More