விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பிரிட்டன் நிறுவனம்

Thompson & Morgan launches novel tomato/potato dual plant

 Thompson & Morgan launches novel tomato/potato dual plant

ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.

மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.

இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.

இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது.

சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.

இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து நாட்டு விவசாயிகளும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

Thompson & Morgan launches novel tomato/potato dual plant

Thompson & Morgan has launched hand-grafted plants producing potatoes and tomatoes at the same time with its new TomTato product. Above the ground gardeners can pick more than 500 cherry tomatoes with a Brix level of 10.2. Below the ground potatoes grow. The concept has been worked on for 15 years, but this is the first time that plants have been successfully produced commercially. Tomatoes are members of the potato family (Solanaceae) and are therefore naturally compatible with potatoes. Each plant is hand-grafted to create this unique double-cropping feature. There’s no genetic modification. TomTato can be grown inside or outside, in a large patio pot or 40 litre bag, on the allotment or in the vegetable patch. Paul Hansord, T&M’s horticultural director, said: ‘When I first saw this plant, I was amazed. Potatoes and tomatoes on the same plant? You really have to grow TomTato™ to believe it’.

Related posts