தமிழகம் முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

Major reshuffle of IAS officers in tamilnadu

சென்னை: தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை தவிர திருவண்ணாமலை, தர்மபுரிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு கிளம்பிய சற்று நேரத்தில் இந்த உத்தரவுகள் நேற்று வெளியாயின. இது தொடர்பாக உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

மாற்றப்பட்ட அதிகாரிகள் முழு விவரம் :

பி.டபிள்யூ.சி.டேவிதார்:  புதிய பதவி: பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர். முந்தைய பதவி: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.
ஹர்மந்தர் சிங்: புதிய பதவி: கைத்திறன், ஜவுளி மற்றும் காதித் துறை முதன்மைச் செயலாளர் முந்தைய பதவி: தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையர்.

எஸ்.கிருஷ்ணன் புதிய பதவி: திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் நிதித் துறை செயலாளர்- செலவினம்.

டி.உதயசந்திரன் புதிய பதவி: நிதித் துறை செயலாளர் (செலவினம்). முந்தைய பதவி: குன்னூர் இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர். புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை இன்ட்கோசர்வ் நிறுவனத் தலைவராகவும் இவரே தொடர்வார்

கே.விவேகானந்தன்: புதிய பதவி: தர்மபுரி மாவட்ட கலெக்டர். முந்தைய பதவி: கவர்னரின் துணைச் செயலாளர் (பல்கலைக்கழகங்கள்)

ஸ்வரன் சிங்: புதிய பதவி: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் முந்தைய பதவி: மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் – சிப்காட்

பிரஜேந்திர நவநீத்: புதிய பதவி: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர். முந்தைய பதவி: சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர்- பணிகள்

சி.என்.மகேஸ்வரன்: புதிய பதவி: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனர். முந்தைய பதவி: சென்னை மாநகராட்சி துணை ஆணையர்- சுகாதாரம்

முஹம்மது அஸ்லாம்: புதிய பதவி: சிறுபான்மையினர் நலத் துறை ஆணையர். முந்தைய பதவி: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனர்

எஸ்.முருகைய்யா : புதிய பதவி: தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனர். முந்தைய பதவி: வேளாண்மைத் துறை கூடுதல் செயலாளர்.

ஆர்.லில்லி: புதிய பதவி: வணிகவரிகள் துறை இணை ஆணையர்- நிர்வாகம். முந்தைய பதவி: தர்மபுரி மாவட்ட கலெக்டர்

டி.ஆபிரகாம்: புதிய பதவி: வணிகவரிகள் துறை இணை ஆணையர்- பெரும் வரி செலுத்துவோர் பிரிவு. முந்தைய பதவி: எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை இயக்குனர்

ஜெ.ஜெயகாந்தன்: புதிய பதவி: எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை இயக்குனர். முந்தைய பதவி: சென்னை மாவட்ட முன்னாள் கலெக்டர்

டி.ஜி.வினய்: புதிய பதவி: சென்னை மாநகராட்சி துணை ஆணையர்- வருவாய் மற்றும் நிதி. முந்தைய பதவி: கரூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு திட்ட அலுவலர்.

டி.ஆனந்த்: புதிய பதவி: சென்னை மாநகராட்சி துணை ஆணையர்- சுகாதாரம். முந்தைய பதவி: திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்ட அலுவலர்

அன்சுல் மிஸ்ரா: புதிய பதவி: வணிகவரிகள் துறை இணை ஆணையர் (அமலாக்கம்). முந்தைய பதவி: மதுரை மாவட்ட கலெக்டர்.

ஏ.ஞானசேகரன்: புதிய பதவி: திருவண்ணாமலை கலெக்டர். முந்தைய பதவி: மதுராந்தகம் துணை கலெக்டர்

பி.ஆர்.சம்பத்: புதிய பதவி: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முன்னாள் ஆணையர். முந்தைய பதவி: அருங்காட்சியகங்கள் துறை ஆணையர்

பிங்ளே விஜய் மாருதி: புதிய பதவி: சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்). முந்தைய பதவி: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையாளராக இருந்த பி.ஆர்.சம்பத் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர். அவர்களுக்கும் இப்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சம்பத் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார்.

English summary:

Major reshuffle of IAS officers in tamilnadu:

Several departments, prominent among them being Civil Supplies and Consumer Protection, got new heads and three districts, including Madurai, new Collectors as the State government effected a major reshuffle of IAS officers on Friday. An officer who was placed under suspension has also been given a new posting.

According to a notification, Swaran Singh, Principal Secretary/Chairman and Managing Director, State Industries Promotion Corporation of Tamil Nadu, is posted as Principal Secretary/Commissioner of Civil Supplies and Consumer Protection.

Commissioner of Museums

P.R. Shampath, formerly Principal Secretary/State Commissioner for the Welfare of Differently Abled Persons, is posted as Commissioner of Museums. Mr. Shampath was suspended a year ago following a sting operation by a television channel.

In other postings, P.W.C. Davidar, Principal Secretary/Managing Director, Tamil Nadu Warehousing Corporation Ltd, is the new Principal Secretary, Personnel and Administrative Reforms Department.

Harmander Singh, Principal Secretary/Industries Commissioner and Director of Industries and Commerce, has been posted as Principal Secretary, Handlooms, Handicrafts, Textiles and Khadi Department.

S. Krishnan, Principal Secretary (Expenditure), Finance Department, has been transferred as Principal Secretary, Planning and Development Department. T. Udhayachandran, Chairman and Managing Director, Tamil Nadu Small Tea Growers Industrial Cooperative Tea Factories Federation Ltd (INDCOSERVE), Coonoor, will be the new Secretary (Expenditure). Mr. Udhayachandran will continue to hold full additional charge as INDCOSERVE CMD.

New Collectors

L. Subramanian, Sub-Collector, Chidambaram, is the new Collector of Madurai. He replaces Anshul Mishra, who has been posted as Joint Commissioner of Commercial Taxes (Enforcement), Chennai.

A.Gnanasekaran, Sub-Collector, Madhuranthagam, has been posted as Collector, Tiruvannamalai. He will replace Dr. Pingale Vijay Maruthi, who will be Deputy Commissioner (Works) of Chennai Corporation in the place of Brajendra Navnit.

Mr. Navnit has been posted as Director of Rural Development and Panchayat Raj.

The new Dharmapuri Collector will be K. Vivekanandan, Deputy Secretary to Governor (Universities). He takes over from R. Lilly, who will become Joint Commissioner of Commercial Taxes (Admin).

T. Jeyakanthan, formerly Collector, Chennai, is posted as Director of Stationery and Printing, replacing T. Abraham, who will be now Joint Commissioner of Commercial Taxes, Large Scale Tax Payers Unit.

T. Anand, Project Officer, District Rural Development, Thiruvannamalai, will be Deputy Commissioner (Health), Chennai Corporation. The incumbent, C.N. Maheswaran has been shifted to Sarva Shiksha Abhiyan as its State Project Director. The present SSA project director Mohammed Aslam will be the new Commissioner of Minorities Welfare.

S. Murugaia, Additional Secretary, Agriculture Department, has been made Managing Director of Tamil Nadu Small Industries Corporation Ltd.

Dr. T.G. Vinay, Project Officer, District Rural Development Agency, Karur, will be Deputy Commissioner (Revenue and Finance), Chennai Corporation.

Courtesy: The Hindu

Related posts