திமுக பற்றி பருதி பேச்சு:மு.க.மணி எங்கே ?

கருணாநிதியின் தத்துப்பிள்ளை, மு.க.மணியை கண்டுபிடிக்க நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., அரசின், இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், அமைச்சர் வளர்மதி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பரிதி இளம்வழுதி கருத்து வெளியிடுகையில், தி.மு.க.,வில் இருப்பது கும்பல், அ.தி.மு.க.,வில் இருப்பது கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும்; கூட்டம் நிலையாக நிற்கும். நானும் நிலையாக உங்களுடன் நிற்பேன். தமிழக அரசியலில், குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் தி.மு.க., வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக தி.மு.க.,விற்கு உழைத்தேன், நான் என்ன தவறு செய்தேன். 1991 – 1996ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.,வாக சட்டசபையில் செயல்பட்டேன். நான் அப்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்து இருந்தால், உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும், கறுப்பு சிவப்பு கொடியும் கிடைத்திருக்காது.

இலங்கையைச் சேர்ந்த, 15 வயது தமிழ் சிறுவனை, கருணாநிதி தத்து எடுத்தார். கனிமொழிக்கு அண்ணன்கள் உள்ளனர். ஆனால், தம்பி இல்லை; அந்த குறையை போக்க, மணி என்ற சிறுவனை தத்து எடுப்பதாக கருணாநிதி தெரிவித்தார். மேலும், மு.க., என்று தன் இன்சியலையும் போடவைத்தார். அந்த சிறுவன் திடீர் என, காணாமல் போய்விட்டான். மறுபடியும் அவனை கண்டுபிடித்து கொண்டு வந்தனர்; மீண்டும் காணாமல் போய்விட்டான். கட்சிக்காரனாக நான் கேட்கவில்லை, தமிழனாக கேட்கிறேன்? அந்த சிறுவனை பொலிஸார் கண்டுபிடிக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையில், கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி கூறினார். தன் மகள் கனிமொழிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காலில் விழுந்தார். இப்போது அவருடைய தன்மானம் எங்கே போனது என அவர் மேலும் தெரிவி்த்தார்.

paruthi ilam vazhudhi speech about DMK party

Related posts