வருகிறது மலிவு விலை அம்மா மினரல் வாட்டர் கேன்

low cost mineral water bottle tamilnadu

குறைந்த விலையில் சுகாதாரமான குடிநீரை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு அம்மா மினரல் வாட்டர்  என்று  உற்பத்தி நிலையம் அமைக்க படும் என்று  முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

இங்கு உற்பத்தியாகும் குடிநீர் ஒரு லிட்டர் அளவுக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டீல்களில் நிரப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் 9 இடங்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

low cost mineral water bottle tamilnadu

low cost mineral water bottle. amma mineral water  by Tamilnadu  government

Related posts