2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது

அலிகார்: உ.பி.யில் உள்ள பல்கலைக்கழத்தில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது .நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த இறந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது .அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலைக்கழத்தில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற 2 மாணவர்கள் மீது தேசதுரோகம் (IPC 124 /A) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அலிகார்:அக்டோபர் 13, 2018
உ.பி.யில் உள்ள பல்கலைக்கழத்தில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது .நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.அந்த இறந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது.

இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது .அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலைக்கழத்தில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற 2 மாணவர்கள் மீது தேசதுரோகம் (IPC 124 /A) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Related posts