கவுகாத்தி :அக்டோபர் 15, 2018
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் 1994ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை ராணுவத்தினர் சிலர் பிடித்து சென்று, பிறகு அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்பட்டது. அந்த இளைஞர்கள் உல்பா பயங்கரவாதிகள் என நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக இந்த போலி என்கவுன்டரை நடத்தியதாக அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி போராடி வந்தது.இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணுவத்தை சேர்த்த மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும்ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங், ஜெகதியோ சிங் , நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்து அனைவருக்கும் ஆயுள் தண்டனையை ராணுவ நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியது .
இதையும் படியுங்கள்
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை!
- 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்
- அதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: 2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது
அடுத்த செய்தி →: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை!

