நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியை விட கூடுதல் தகுதியுடையவர் பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:ஆர்.லக்‌ஷ்மி பிரபா என்பவர் மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்து தேர்வானார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதி உள்ளதால் அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் பி.இ. படிப்பை முடித்திருந்ததால் மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருந்தது.ஆர்.லக்‌ஷ்மி பிரபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். நீதிபதி கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Related posts