A woman committed suicide with her two kids in Sankarankovil
நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகாவில் கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரில் சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவில் வாழ்த்து வருபவர் திரு.கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவியின் பெயர் திருமதி.பத்மா. இந்த தம்பதியினருக்கு 9 வயது மற்றும் 7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். திரு.கோபாலகிருஷ்ணன் கேரளாவில் மாட்டு பால் கறக்கும் வேலை செய்து வருகின்றார். இவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்தை காண ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திரு.கோபாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு குடும்பத்தை காண வந்தார். அன்று முதல் கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை ஏற்பட்டு வந்ததது. நேற்று இரவு மீ்ண்டும் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் திரு.கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்த தகராறில் மன வருத்தம் அடைந்த திருமதி.பத்மா வீட்டை உள்புறம் பூட்டி, சமையல் அறைக்கு சென்று அங்கே இருந்த சமையல் வாயு சிலிண்டரின் இணைப்பை தூ்ண்டித்து விட்டு அதன் அதை படுக்கை அறைக்கு கொண்டு சென்றார். அங்கே அவரது மகள்கள் மாலதி மற்றும் மஞ்சு ஆகிய இருவரும் இருந்தனர்.பின்னர் அதன் பின் அவர் அந்த சமையல் வாயு சிலிண்டரை திறந்து தீ பற்ற வைத்தார். தீ வேகமாக அறை முழுவதும் பரவியது. தீயின் வெப்பம் தாங்க முடியாமல் குழந்தைகள் இருவரும் கதறினார்கள். தீயில் மூவரும் கருகி இறந்தனர். சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கரியாகவும் புகைமண்டலமாகவும் இருந்ததை கண்டு அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சங்கரன்கோவில் டி.எஸ்.பி திரு.மாதவன், காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், திரு.பிரபாகரன், உதவி கண்காணிப்பாளர் திரு.பவுல் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்தார்கள். அங்கே எரிந்து கரி கட்டையாகி கிடந்த திருமதி.பத்மா மற்றும் அவரது குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.