50 Students Killed in Nigerian Terrorist Attack
நைஜீரியாவில் தீவிரவாதிகள் கல்லூரி மாணவர்கள் விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த 50 மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொலை செய்தனர். நைஜீரியாவில் குஜ்பா எனும் கிராமத்தில் இருக்கும் வேளாண்மை கல்லூரி மாணவர் விடுதிக்குள் திடீரென நுழைந்த தீவிரவாதிகள், உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதல் நடத்தினார்கள். அலறியடித்துக் கொண்டு உயிருக்கு பயந்து ஓடிய கல்லூரி மாணவர்களை துரத்தி சென்று தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றார்கள். பல மாணவர்கள் ஓடி சென்று அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டார்கள், எனினும் தேடிச்சென்று அவர்களை தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் 50 மாணவர்கள் இறந்தனர். 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள். சம்பவம் பற்றி அறிந்தவுடன் ராணுவமும், காவல்துறையினரும் அங்கு விரைந்து சென்றார்கள். அதற்குள் அந்த தீவிரவாதிகள் வாகனங்களில் ஏறி தப்பினர். அந்த கல்லூரிக்கு வந்த தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்திருந்தனர் என்பதும், அவர்கள் மாணவர் விடுதிகளில் மட்டுமே தாக்குதல் நடத்தினர், மாணவிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
50 Students Killed in Nigerian Terrorist Attack
Suspected Islamist extremists attacked an agricultural college in the dead of night, gunning down dozens of students as they slept in dormitories and torching classrooms, the school’s provost said, reporting the latest violence in northeastern Nigeria’s ongoing uprising. As many as 50 students may have been killed in the assault that began at about 1 a.m. Sunday in rural Gujba, he told AP. “They attacked our students while they were sleeping in their hostels, they opened fire at them,” he said. The military has collected 42 bodies and transported 18 wounded students to a hospital, said an official. The extremists rode into the college in two double-cabin pickup all-terrain vehicles and on motorcycles, some dressed in military uniforms, a student, Ibrahim Mohammed, said. He said they appeared to know the layout of the college, attacking the four men’s hostels but avoiding the one hostel reserved for women. “We ran into the bush, nobody is left in the school now,” he said. Almost all those killed were Muslims, as is the college’s student body, said a survivor. Most schools in the area closed after militants on July 6 killed 29 pupils and a teacher, burning some alive in their hostels, at Mamudo outside Damaturu.