அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் போதைப் பொருள்

3-year-old US girl brings 14 bags of pot to school

3-year-old US girl brings 14 bags of pot to school

அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் 14 பொட்டலங்களில் போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்லம் பகுதியில் ஒரு பள்ளியில் படிக்கும் மூன்று வயது நிரம்பிய ஒரு சிறுமி தினமும் செல்வது போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த குழந்தையின் பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு காரணம் அந்த குழந்தையின் பையில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனும் போதைப் பொருள் இருந்தது. இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு உடனே தகவல் அளித்தனர். அவர்களும் உடனே பள்ளிக்கு விரைந்து சென்று போதைப் பொருளை பறிமுதல் செய்தார்கள். அந்த சிறுமியிடம் விசாரணை செய்து அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியினுடைய தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் அந்த போதைப் பொருளை சிறுமியினுடைய பள்ளிப் பைக்குள் வைத்தது அறியப்பட்டது. இதனைய்யடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மெனாவை கைது செய்தனர்.

3-year-old US girl brings 14 bags of pot to school

A 3-year-old girl accidentally brought 14 bags of marijuana to school in US, which was stuffed in her backpack by a family friend.

Related posts