நாமக்கலில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை

Dowry harassment in  Namakkal -The young girl committed suicide

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெருமாள்கோயில் மேட்டைச் சேர்ந்த மாதேஸின் மகன் சோமசுந்தரம் (32) சேலம் வருமானவரித்துறை அலுவலக தாற்காலிக கார் ஓட்டுநர்.  இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சிற்றுந்து ஓட்டுநராக பணியாற்றிய போது ராசிபுரம் அருகே ஓ.சௌதாபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகள் அகிலா(20) என்பருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நாமக்கல் அருகே முருகன்கோயில் பகுதி என்ஜிஜிஓ காலனியிலுள்ள வனஅலுவலர் வரதராஜன் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இவர்களுக்கு ஒன்னரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு மனைவியை, சோமசுந்தரம் கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அகிலா கொடுத்த புகார்படி போலீஸார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த, 8-ம் தேதி, கணவன் – மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், அகிலா கோபித்துக் கொண்டு ஓ.சவுதாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடந்த 11-ம் தேதி மனைவியை, மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்ட சோமசுந்தரம் வீட்டுக்கு வரச்சொல்லி மிரட்டி உள்ளார். செவ்வாய்க்கிழமை காலை இருவரிடையே ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து சோமசுந்தரம் வேலைக்குச் சென்றுவிட்டார். மாலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் வரதராஜன் மனைவி காளியம்மாள் பார்த்தபோது வீட்டுக்குள் அகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின்பேரில் விரைந்து வந்த சோமசுந்தரம் அகிலாவின் சடலத்தை பார்த்துவிட்டு வெளியே சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், திருச்செங்கோடு சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குபுறத்தில் ஆண் ஒருவர் விஷம் குடித்தநிலையில் இறந்த கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை மதியம் தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று பார்க்கையில் இறந்து கிடந்தது அகிலாவின் கணவர் சோமசுந்தரம் என்பது தெரியவந்தது. வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் போலீஸாரின் நடவடிக்கைக்கு பயந்து சோமசுந்தரம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் தொடர்ந்து  விசாரித்து வருகின்றனர்.

Dowry harassment in  Namakkal -The young girl committed suicide

Related posts