விஸ்மயா வழக்கு : வரதட்சணை மரணம் மற்றும் தற்கொலைக்கு தூண்டிய கணவரை குற்றவாளி என கேரள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு .

விஸ்மயா வழக்கு : வரதட்சணை மரணம் மற்றும் தற்கொலைக்கு தூண்டிய கணவரை குற்றவாளி என கேரள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு .

கொல்லம் : பரபரப்பான விஸ்மயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் எஸ்.கிரண் குமார் குற்றவாளி என கொல்லம் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பளித்தார். நான்கு மாத கால விசாரணைக்கு பிறகு விஸ்மயாவின் கணவர் கிரண் குற்றவாளி என நீதிபதி சுஜித் கேஎன், தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றார்.

எம்விடி அமலாக்கப் பிரிவில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்தவர் கிரண்குமார்,ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை மாணவி விஸ்மயா.தன் கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்ததை அடுத்து, ஜூன் 21,2021 அன்று தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

குற்றவாளியின் தந்தை சதாசிவன் பிள்ளை, தாய் பிந்து குமாரி, சகோதரி கீர்த்தி மற்றும் அவரது கணவர் முகேஷ் உட்பட 42 சாட்சிகள்,102 ஆவணங்கள் மற்றும் பல அழைப்புப் பதிவுகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. விஸ்மயா இறப்பதற்கு முன் அவரது தொலைபேசியில் இருந்து அவரது கணவருடன் பேசிய பதிவுகள்,டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியவை வழக்கின் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டன.

வரதட்சணை கேட்டல்,உடல் ரீதியான தாக்குதல்,தற்கொலைக்குத் தூண்டுதல்,காயங்களை ஏற்படுத்துதல்,மிரட்டல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால். குற்றவாளி கிரண் ஐ பி சி யின் கீழ் முறையே 304 பி (வரதட்சணை மரணம்), 498 ஏ (வரதட்சணை கொடுமை) மற்றும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தண்டனை பெறுவார்.குற்றவாளிகள் தரப்பில் பிரதாப சந்திரன் பிள்ளை ஆஜரானார்.

இந்த தீர்ப்பு சமூகக் கொடுமைக்கும் – வரதட்சணைக்கும் எதிரான தீர்ப்பு, தனி மனிதனுக்கு எதிரான தீர்ப்பு அல்ல என்றும் குற்றத்திற்காக கிரணுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமென்று நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்,” என்று இந்த வழக்கில் வாதாடிய சிறப்பு அரசு வழக்கறிஞர் (SPP) ஜி மோகன்ராஜ் கூறினார்.விசாரணை அதிகாரிகளும், விஸ்மயாவின் தந்தையும் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். விஸ்மயாவின் தந்தை திருவிக்ரமன் நாயர், “நீதிமன்றத்தின் தீர்ப்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது” என்றார்.
.

Related posts