விபச்சாரம் என்பது ஒரு தொழில், அனைவருக்கும் முழு சட்டப் பாதுகாப்பு உள்ளது : சுப்ரீம் கோர்ட்

விபச்சாரம் என்பது ஒரு தொழில், அனைவருக்கும் முழு சட்டப் பாதுகாப்பு உள்ளது : சுப்ரீம் கோர்ட்

இந்த உத்தரவுகள் பாலியல் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பானவை மட்டுமே என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது
உச்சநீதிமன்றம் சமூக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒரு திருப்புமுனையாக விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.மற்றவர்களுக்குக் கிடைக்கும்”சுயமரியாதை மற்றும் கண்ணியம்” பாலியல் தொழிலாளிக்கும்,அவர்களது குழந்தைகளுக்கும் கிடைக்க உரிமை உண்டு என்றும் அவர்கள் வாழ்வதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராவ் ,பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகிய மூவர் அடங்கிய அமர்வு கூறியது.
பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட உத்தரவுகள்,காவல்துறையை மையமாகக் கொண்டவை என்றும்,பாலியல் தொழிலாளர்களிடம் “மிருகத்தனமாக” மற்றும் “வன்முறையாக” நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்களை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது,வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும், அவர்களை வன்முறைக்கு உட்படுத்தக்கூடாது அல்லது எந்தவொரு பாலியல் செயலிலும் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் இந்த அமர்வு உத்தரவிட்டது.
ஜூலை 19, 2011 இல் அமைக்கப்பட்ட குழுவின் 10 பரிந்துரைகளை அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் அசாதாரண அதிகாரங்களை வழிகாட்டுதலாக நீதிமன்றம் கூறியது. மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றுவதில் இழுத்தடித்து வருவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்திய ஒன்றியத்தால் ஒரு சட்டம் இயற்றப்படும் வரை அதன் உத்தரவுகள் தொடரும் என்று கூறியது.
“பாலியல் தொழிலாளி வயது வந்தவர் என்பதும் சம்மதத்துடன் பங்கேற்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிந்தால், காவல்துறை தலையிடுவதையோ அல்லது குற்ற நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.”காவல்துறையினர்” பாலியல் தொழிலாளர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகப் பார்ப்பது கவலையளிப்பதாகவும், ஒரு பாலியல் தொழிலாளி “குற்றம்/பாலியல்/ வேறு ஏதேனும் குற்றங்கள்” என்று புகார் செய்தால், காவல்துறை அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றம், ”தன்னிச்சையான பாலியல் வேலை சட்டவிரோதமானது அல்ல என்றும் விபச்சார விடுதியை நடத்துவது மட்டுமே சட்டவிரோதமானது” என்றும் அடிக்கோடிட்டுக்கூறியது.எந்தவொரு விபச்சார விடுதியில் சோதனை நடந்தாலும்… சம்பந்தப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் தண்டிக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ அல்லது கைது செய்யப்படவோ கூடாது,
“பாலியல் தொழிலாளியின் எந்தக் குழந்தையும் தாயிடமிருந்து பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது என்ற காரணத்திற்காகப் பிரிக்கப்படக்கூடாது” என்றும், “ஒரு மைனர்” அவர்/அவள் விபசார விடுதியில் இருந்தால், கடத்தப்பட்டதாகக் கருதக்கூடாது, பாலியல் தொழிலாளி அவர்/அவள் தனது மகன்/மகள் என்று கூறினால், அந்த உரிமைகோரல் சரியானதா என்பதை கண்டறிய சோதனைகள் செய்யப்பட வேண்டுமே தவிர மைனரை வலுக்கட்டாயமாக பிரிக்கக்கூடாது என அமர்வு கூறியது.
“பாலியல் தொழிலாளர்களை” மீட்பு,சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளின் போது,அவரது அடையாளங்களை புகைப்படமாகவோ,காணொளியாகவோ எடுக்கவோ, வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது, என்றும் இதற்கு ஊடகங்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.ஆறு வார காலத்திற்குள் குழு அளித்த பரிந்துரைகளுக்கு தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு இந்திய ஒன்றியத்திற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related posts