வண்டி ஒட்டும் போதே நெஞ்சு வலியால் இறந்த லாரி ஒட்டுநர்

a mini lorry driver died while driving the vehicle

a mini lorry driver died while driving the vehicle

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பக்கமுள்ள  உத்தண்டி கிராமம், கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், வயது- 48. அவரது மனைவி கீதா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மாரப்பன், மினி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சென்னையிலிருந்து, கோயமுத்தூருக்கு, பிளாஸ்டிக் சீட்களை தன்னுடைய மினி லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். சனிக்கிழமை இரவு சங்ககிரி அருகே உள்ள விராச்சி பாளையம் அருகே சென்றபோது, மாரப்பனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

அதனால், லாரியை சாலையோரம் நிறுத்தியவர், வண்டியை ஆஃப் செய்ய முடியாமல், பிரேக்கை காலால் அழுத்தி பிடித்த நிலையில் உயிரிழந்தார். இரவு முழுவதும், வண்டி ஓடிக்கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலை, வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருப்தை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து, டிரைவர் மாரப்பனை எழுப்பினர்.

அப்போது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. பொதுமக்கள் தகவல் கொடுத்ததையடுத்து சங்ககிரி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Marappan(48), a mini lorry driver died while driving the vehicle.

Related posts