காதலன் மீது ஆசிட் வீசிய பெண் கைது

Girl throws acid on lover for refusing to marry her

Girl throws acid on lover for refusing to marry her

உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை மணக்க மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்னி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும், தர்மேந்திரா என்னும் நபரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயிக்க முடிவுசெய்தனர். இந்த தகவலை தனது காதலன் தர்மேந்திராவிடம் தெரிவிக்க அப்பெண் சென்றுள்ளார்.

அப்போது, தனது காதலை மறுத்த தர்மேந்திரா, அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அந்த பெண் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பெண் நேற்று தர்மேந்திரா மீது ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தினார். பலத்த காயமடைந்த தர்மேந்திரா மாவட்ட மருத்துவமனையில் இருந்து தற்போது லக்னோ மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஆசிட் ஊற்றிய இளம்பெண்ணை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

Girl throws acid on lover for refusing to marry her

Infuriated over rejection of her marriage proposal, a 20-year-old girl allegedly threw acid on her lover in Padhni village here, police said today. The girl threw acid on Dharmendra yesterday afternoon, they said, adding that she had been angry with her lover ever since he had refused to marry her. The youth was rushed to the district hospital from where he was referred to the Lucknow medical college hospital, police said. The girl has been arrested.

 

Related posts