செங்கோட்டை அருகே காரும் அரசுப் பேருந்தும் மோதி விபத்து ஐந்து பேர் பலி

5 killed 7 injured bus car collision

5 killed 7 injured bus car collision
5 killed 7 injured bus car collision

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே இலஞ்சி – கொட்டாகுளம் திருப்பத்தில் அரசுப் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த பழனி, பச்சையப்பன், செல்வம், சவுகத் அலி, செல்வராஜ், ராஜ்குமார், பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர், குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு, நேற்று இரவு செங்கோட்டை- பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள புரோட்டா கடையில் உணவுண்டனர். பின்னர் இரவு 11 மணி அளவில் தங்கள் ஊருக்கு காரில் திரும்பினர். பார்டரில் இருந்து சிறிது தொலைவில், அவர்கள் சென்ற கார், செங்கோட்டை-திருமங்கலம் சாலையில் கொட்டாகுளம் கிராமத்தில் உள்ள இசக்கியம்மன் கோவிலை அடுத்த திருப்பத்தில் வேகமாகத் திரும்பியது. அப்போது, மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்றுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரிலிருந்த பழனி, பச்சையப்பன், செல்வம், சவுகத் அலி, செல்வராஜ் ஆகிய 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும், காரில் இருந்த ராஜ்குமார், பன்னீர் செல்வம், பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை, குற்றாலம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கோட்டை – இலஞ்சி பகுதியில் கொட்டாகுளத்தை அடுத்த இந்தச் சாலைத் திருப்பம் மிகவும் குறுகலானது மட்டுமல்ல, சாலையில் எதிர்ப்புறம் வருபவர் தெரியாத அளவுக்கு மரங்களால் சூழப்பட்ட வளைவு. இந்த வளைவுக்கு முன்னதாக எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருந்தும், ஓட்டுநர்களின் கண்களில் படாத அளவுக்கு அமைந்திருப்பதும், சாலையை அகலப் படுத்த போதிய இடம் இருந்தும் சரியான நடவடிக்கை எடுக்கப் படாததும், இந்த வளவில் அடிக்கடி மோசமான விபத்துகள் ஏற்படுவதாக இப்பகுதியினர் கூறுகின்றனர்.

5 killed 7 injured bus car collision

Five persons were killed and four others were injured when a Tamilnadu State Transport Corporation (TNSTC) bus collided with a car at Kottakulam village near Tenkasi on the Tenkasi-Kollam national highway, here early today.

 

Related posts