பெண்களின் தற்காப்பிற்க்கு மிளகாய்பொடி அவசியம் என போலீசார் அறிவுரை

Police advised Girls to use Chili Powder as a prevention tool

Police adviced Girls to use Chili Powder as a prevention tool

பெண்களின் தற்காப்பிற்க்கு மிளகாய்பொடி அவசியம் என போலீசார் அறிவுரை.

”மதுரையில், பெண்கள் நகைபறிப்பு திருடர்களிடமிருந்து தப்பிக்க, எப்போதும் மிளகாய்பொடி கைவசம் வைத்திருக்க வேண்டும்” என்று குற்றப்பிரிவு போலீசார் அறிவுரை கூறியுள்ளார்.

மல்லிகை குடியிருப்பில், கே.கே.நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் ஏற்படும்நகை பறிப்பு மற்றும் வீடுகளில் திருட்டை நடக்காமல் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலைவாணி மாதர் சங்கம் மற்றும் ஸ்நேகா மாதர் சங்கம் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

குற்றப்பிரிவு துணை கமிஷனர்  அறிவுரை

”வெளியே செல்லும் போழுது நகைக்கடை விளம்பரம் போன்று அதிக நகைகளை அணிந்து செல்ல கூடாது. பஸ் ஸ்டாண்டில், ரயில்வே ஸ்டேஷனில் திருடர்களைப் பற்றி எச்சரிக்கும்போது, உங்கள் பையை பயத்தில் நீங்களே ஆய்வு செய்ய வேண்டாம். பருப்பு, அரிசி டப்பாக்களில் பீரோ சாவியை வைக்க கூடாது. வங்கியில் பணம் எடுக்கும்போதும் போடும்போதும், அறிமுகமில்லாதவர் தெரிந்தவர் போல் பேசி, நம் கவனத்தை திசை திருப்பலாம். அவர்களிடம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்” என்று குற்றப்பிரிவு துணை கமிஷனர்  சாமந்த்ரோகன் ராஜேந்திரான் கூறினார்.

அண்ணாநகரில் கூடுதலாக போலீசார் நியமனம்

அண்ணாநகர் உதவிகமிஷனர் நாராயணன், ”வெளியூருக்குச் சென்றால் போலீசாருக்கு தகவலலிக்க வேண்டும். சுழற்சி முறையில்  போலீசார் கண்காணிப்பர். வீட்டின் பின்புற கதவிற்க்கும் பூட்டிட்டு செல்வது அவசியம். அண்ணாநகர் பகுதியில் ஏற்படும் குற்றங்களை தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரன் கூறுகையில், “வெளியூர் சென்றால் போலீசாருக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் அளியுங்கள். சாவியை வீட்டிலேயே வைக்காமல், நம்பிக்கைக் குரியவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள். தனியாக செல்லும்போது கைவசம் மிளகாய்பொடி தயாராக வைத்துக்கொள்ளுங்கள். யாராவது நகைபறிக்க முயன்றால் அதை பயன்படுத்துங்கள். பணத்தை கீழே போட்டு மற்றும் பிஸ்கட் போன்ற போருட்களைப் போட்டும் நம் கவனத்தை திசைதிருப்பி, பொருட்களை திருடுவர். அதேபோல், போலீஸ் என்றுக்கூறியும் உதவுவது போலவும் நடித்து சிலர் நகைகளைத் திருடுவர். அப்படிப் பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கல், என்றார்.

Police advised Girls to use Chili Powder as a prevention tool

Criminal Section police has advised girls to use chili powder to prevent them from chain robbers and thieves. There was a meeting held in Malligai Apartment to prevent theft occurrence in K. K. Nagar and Anna Nagar in Madurai. Kalaivani womens club and Sneha womens club members were participated on this meeting. Deputy-Commissioner Samanthroogan Rajendran said as follows: “Girls should not were more jewels like jewelery shop advertisement, also should not check their bags when there was announcement about robbers. Also bureau keys should not be kept in pulses and rice treaters. When taking money in bank avoid unknown people who talks unnecessarily.” Anna Nagar Sub-Commissioner Narayanan says to inform police whenever going out of station so that police will visit on routine inspection. Also he asked to use locker to back side doors. Later Criminal Inspector Chandran says that: While going out of station inform us as well as neighbours, Give keys to the persons whom you know well other than keeping it in the house. Girls should always keep Chili Powder ready so that when someone neared to robe the chain we can use it. Also robbers will throw money of biscuits to divert your attention, always be aware of it. Some may come in police makeup to robber be aware of them.

Advertisement: To buy plots or lands with CMDA Approval, click here

Related posts