புதுடெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறி 1992ல் மசூதி இடிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்கும், ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்திற்கு என மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.மீதம் உள்ள பகுதியை , ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாராவுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து 14 மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனு செய்யபட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜூலை 25ம் தேதிக்குள் அயோத்தி விவாகரம் தொடர்பாக சமரக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி உத்தரவிட்டனர்.