world kidney day
ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்ப டும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப் படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும்,சிறுநீரகப் பிரச்சனை வரும். சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக இரத்த அழுத்தமும் சிறுநீரகத்தை பாதிக்கும். எனவே அவ்வப்போது இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
நம் தாத்தா பாட்டி காலம் மற்றும் அதற்கு முன்பு உண்ணும் உணவு இயற்கை உரம் போட்டு விளைந்ததாக இருந்தது. இன்றைக்கு குளிர் பானங்கள், பீட்சா, பர்கர் போன்ற அயல்நாட்டு துரித உணவு வகைகள், செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள், சுத்தமற்ற குடிநீர் எல்லாம் சேர்ந்து நம் ரத்தத்தில் அதிக வேதி பொருட்களை (யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் போன்ற கழிவுப் பொருட்கள்) கலந்துவிடும். அதனால் வாந்தி, இளைப்பு, விக்கல், கை, கால் வீக்கம், சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு மரணம் கூட ஏற்படும். சிறுநீரகம் இந்த வேதி பொருட்கள் நிறைந்த அழுக்கான ரத்தத்தை சுத்தப்படுத்த திண்டாடுகிறது. ரத்த சுத்திகரிப்பு கடினமாகும் நிலையில் சிறுநீரகம் சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக ஆரம்பிக்கும்.
சிறுநீரகத்தின் பணி, ரத்தத்தை சுத்தப்படுத்துவதாகும். உணவுப் பொருளின் மூலம் ரத்தத்தில் சேரும் வேதிப் பொருட்கள் சிறு நீரக செயல் இழப்புக்கு முக்கிய காரணம். இருந்த போதிலும் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத உயர் ரத்த அழுத்தம், தீவிரமான சர்க்கரை நோய் போன்றவை காரணமாகவும் சிறுநீரகம் செயல் இழக்க கூடும்.உணவில் உப்பு அதிகம் சேருவதும் சிறுநீரக செயல் இழப்புக்கு காரணமாக அமையும்.பொதுவாக மனித உடம்பிற்கு ஒரு நாளைக்கு 1.5 கிராம் சோடியம் உப்பு போதுமானது. ஆனால், இதற்கு அதிகமாகவே உணவின் மூலம் நம் உடம்பில் உப்பு சேருகிறது. இதற்கு முன் அதிக உடல் உழைப்பை செலவிட்டோம்.
வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தானாகவே இந்த உப்பு உடம்பிலிருந்து வெளியேறி விடும். இன்று அதற்கு வழி இல்லை என்பதால் மிதமிஞ்சிய உப்பு ரத்தத்தில் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில், அதிக அளவில் சோடியம் உப்பை உண்பதும் சிறுநீரக பாதிப்புக்கு காரணம். கல் உப்பை விட ‘ரீஃபைண்ட்’ உப்பில் சோடியத்தின் அளவு அதிகம் இருக்கிறது என்பதால் அதனை உணவில் குறைவாக பயன்படுத்துவது நல்லது.
சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக வலியும், தொந்தரவு எதுவும் நோயாளிக்குத் தெரியாது என்பதால் அதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடிப்பது மிக கஷ்டம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு என மருத்துவரிடம் சென்றால் அவரும் சிறுநீரக பரிசோதனை செய்ய சொல்வதில்லை. முழுதுமாக சிறுநீரகம் செயல் இழந்தப் பிறகுதான் பின்னரே சிறுநீரக நிபுணரிடம் (ஆங்கி# நெப்ராலஜி) போகிறார்கள்.
சிறுநீரக தானம் தருபவர்கள் உறவினராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதற்கு முன்னால் சிறுநீரக தானம் தருபவருக்கும், நோயாளிக்கும் ரத்தப் பொருத்தம், திசுப் பொருத்தம் இருந்தால்தான் தானமாகத் தர முடியும். ஆனால் இப்போது எந்த ரத்த வகை, எந்த திசு வகையினரும் யாருக்கும் சிறு நீரகத்தை தானமாகத் தரலாம். ஆனால், பணத்திற்காகவோ, கட்டாயப்படுத்தியோ சிறுநீரகத்தை தானமாகப் பெறக் கூடாது என்பது சட்டம்.
டயாலிஸிஸ்..!
வடிகட்டியை போல செயல்பட்டு சிறுநீரகம் தொடர்ந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரகம் செயல் இழக்கும்போது ரத்தத்தில் வேதிப்பொருட்கள் சேர ஆரம்பிக்கும். இந்த வேதிப் பொருட்களை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் ரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் ‘டயாலிஸிஸ்’ இப்போது ஹுமோ டயாலிஸிஸ் என்ற கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், பெரிடோனியல் டயாலிஸிஸ் என்ற வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
சிறுநீரக செயல் இழப்புக்கு உள்ளானவர் தினசரி டயாலிஸ் செய்துகொள்வதுதான் முறையானது. ஆனால், அதற்கு செலவு மிகவும் அதிகமாகும். வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.சிறுநீரக செயல் இழப்புக்கு நிரந்தர தீர்வு இருக்கிறது. சிறுநீரகத்தை தானமாகப் பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் நிரந்தரமான தீர்வு. வரும் ஆண்டுகளில் விலங்குகளிலிருந்து உறுப்பை எடுத்து பொருத்துதல் மற்றும் ஜுனோ டிரான்ஸ் பிளாண்ட், செயல் இழந்த உறுப்பை மறுசீரமைப்பு செய்தல் ரீ-ஜெனரேட்டிவ் போன்ற வசதிகள் வரக்கூடும்.
நீரிழிவு நோயாளிகள் சிறுநீரில் உப்பு அதிகம் போகிறது என்றால் சிறுநீரகத்தை கவனிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் சிறு நீரில் உப்பு அதிகமாக வெளியேறினால் சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும். கண்ணில் புரை (ரெடினோபதி) வளர்ந்தால் சிறு நீரகத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும்
.
ஃபாஸ்ட் ஃபுட் (துரித உணவு) தவிர்ப்பு, உப்பை குறைத்தல், வியர்வை வெளியேற உடற்பயிற்சி, தானியங்களை ஊற வைத்த தண்ணீர், அருகம்புல் சாறு போன்றவற்றை அருந்தி வந்தால் சிறுநீரக பாதிப்பை தடுக்க முடியும். இவ்விதம் செய்வதால் சிறுநீரகம் உஷ்ணம் தணிந்து மீண்டும் இயங்கும்.
world kidney day
World Kidney Day is observed annually on the 2nd Thursday in March.