பணியிலிருந்து பாதியில் விலகும் 60 சதவிகித பெண்கள்

women-work

கடந்த 10 ஆண்டுகளாக பெண்கள் திறன் படைத்தவர்களாக விளங்கி வருகின்றனர். பெண்கள் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், முதன்மை செயல் அதிகாரிகள், தமிழக காவல்துறை தலைவர் என பெண்கள் பலவித உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர்.மென்பொருள் நிறுவனங்களில் 30 சதவீதம் பேர் பெண்கள்; ஊரகப்பகுதிகளில் வேளாண் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 89.5 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். பால் உற்பத்தி தொழிலில் 94 சதவீத பெண்கள் பணியாற்றுவதாக உலக வங்கி ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது.  மேலும் பெண்களின் பணி திறன் குறித்து 17 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பெண்களின் தன்னம்பிக்கை 70 சதவீதமாகவும், சீனா பெண்கள் 68 சதவீதமும், பிரேசில் பெண்களின் அளவு 58 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் பெண்கள் 29 மற்றும் 24 சதவீதத்தையே பிடித்துள்ளனர். அதிலும் அமெரிக்காவில் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் பணிபுரிகின்றனர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 8 கோடி வேலைவாய்ப்புகளில் 6 கோடி இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையால் ஆண்களே அதிகளவில் பணி இழந்தனர்.  இந்திய பெண்கள் பல துறைகளில் சாதித்து வந்தாலும் வர்த்தக துறையில் 25 சதவீத பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். வர்த்தகத்தில் பெண் ஊழியர்கள் அமெரிக்காவில் 52 சதவீமும், ஸ்பெய்னில் 48 சதவீதமும், கனடாவில் 46 சதவீதமும், பின்லாந்தில் 44 சதவீதமும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 23 சதவீதம் மட்டுமே என்று கட்ந்தாண்டு ஆய்வு தெரிவித்த நிலையில் பணிபுரியும் இடங்களில் ஆண், பெண் பாகுபாடின்றி சமநிலை ஏற்படுவது தொடர்பான விவாதங்கள் ஒருபுறமிருக்க, 60 சதவிகித பெண்கள் தங்கள் பணியை இடையில் விட்டுவிடுவதாக தெரிய வந்துள்ளது. ஆரம்ப நிலையில், பெண்களை பணியில் சேர்த்து பயிற்சி அளிப்பதில் நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டுவதாக மனித வளத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், நடுத்தர பதவிக்கு வரும்போது அவர்களை பொறுப்பில் தக்க வைப்பதில் நிறுவனங்கள் தடுமாறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்கு இடையே பணியில் சமநிலை வகிப்பதில் பெண்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால், பணிபுரியும் பெண்களில் 60 சதவிகிதம் பேர் இடையிலேயே தங்கள் பணியில் இருந்து விலகுவதாகவும் மனித வளத்துறை நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related posts